Published : 05 Apr 2016 03:57 PM
Last Updated : 05 Apr 2016 03:57 PM

67 - ஆரணி

பட்டு நகரம் என்று அழைக்கப்படுகிறது. உலக புகழ்பெற்ற பட்டு சேலைகள் தயாரிக்கப்படும் பகுதியாகும். அரிசி ஆலைகளுக்கும் பஞ்சமில்லை. பட்டு சேலைகள் மற்றும் தரமான அரிசிகள் ஆகியவை தமிழகம் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தசரத மகா சக்கரவர்த்தி குழந்தை வரம் வேண்டி வழிபட்ட புத்திர காமேட்டீஸ்வரர் கோயில் உள்ளது. நெசவாளர்களும், அவர்களுக்கு அடுத்தபடியாக விவசாயிகளும் நிறைந்த பகுதி. நெல், கரும்பு ஆகியவை அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. அனைத்து தரப்பு மக்களும் வெகுவாக வசிக்கின்றனர்.

ஆரணியில் பட்டு ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்று நெசவாளர்கள் வலியுறுத்துகின்றனர். ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்கள் வாக்குறுதி கொடுக்கின்றனர். ஆனால், வெற்றி பெற்ற பிறகு செயல்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள மறந்துவிடுகின்றனர். காமராஜர் ஆட்சியில் தொடங்கப்பட்ட பஞ்சாலை மட்டுமே உள்ளது. அதனால், வேலை வாய்ப்பு ஏற்படுத்த தொழிற்பேட்டை அமைத்துக் கொடுக்க வேண்டும். அரசு மருத்துவமனை பெயரளவில் இயங்குகிறது. உடலில் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும், வேலூருக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. அதனால், அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்தி, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்ற வேண்டும். மருத்துவர் காலி பணியிடங்களை நிரப்பி சிறப்பு மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.

ஆரணியை கடந்து செய்யாறு மற்றும் கமண்டல நாக நதி செல்கிறது. சுமார் 25 கி.மீ., தொலைவுக்கு செல்லும் இரண்டு ஆறுகளிலும் 5 கி.மீ., தூரத்துக்கு ஒரு தடுப்பணை கட்டிக் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி, செய்யாறு, ஆரணி வழியாக ஆந்திர மாநிலம் நகரியை இணைக்கும் புதிய ரயில் பாதை திட்ட பணியை தொடங்க வேண்டும். ஆரணியில் முக்கிய பிரச்சினையாக இருப்பது பேருந்து நிலையம். இரண்டு பேருந்து நிலையங்கள் இருந்தும் பயனில்லை. அதனால், நகருக்கு வெளியே ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைத்து கொடுக்க வேண்டும். அப்போதுதான் ஆரணி நகரம் விரிவரையும்.

ஆரணி சட்டபேரவை தொகுதியில் கடந்த 1962-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடைபெற்ற 12 தேர்தலில் திமுக மற்றும் அதிமுக தலா 5 முறையும், காங்கிரஸ் மற்றும் தேமுதிக தலா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளரு. கடைசியாக 2011-ல் நடைபெற்ற தேர்தலில் தேமுதிகவை சேர்ந்த ஆர்.எம். பாபு முருகவேல் வெற்றி பெற்று சட்டபேரவை உறுப்பினராக உள்ளார்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

சேவூர் எஸ்.ராமச்சந்திரன்

அதிமுக

2

எஸ்.பாபு

தி.மு.க

3

ஆர்.எம்.பாபுமுருகவேல்

தேமுதிக

4

சு.ராஜசேகர்

பாமக

5

பு.கோபி

பாஜக

6

ஜெ.மோகன்ராஜ்

நாம் தமிழர்



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

ஆரணி வட்டம்

செய்யார் வட்டம் (பகுதி)

கடுகனூர், மேல்நாகரம்பேடு, மேல்மட்டை, விண்ணமங்கலம், அகத்தேரிப்பட்டு, மாளிகைப்பட்டு, மேல்கொவளைவேடு, வள்ளேரிப்பட்டு, புதுக்கோட்டை, நாவல்பாக்கம், கொருக்கத்தூர், முனுகப்பட்டு, மேல்சீசமங்கலம், திருமணி, மேல்புத்தூர், தேவனாத்தூர் மற்றும் பில்லாந்தை கிராமங்கள்.

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,24,100

பெண்

1,30,308

மூன்றாம் பாலினத்தவர்

1

மொத்த வாக்காளர்கள்

2,54,409

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

1951

வி. கே. கண்ணன்

பொது நல கட்சி

17761

1957

பி. துரைசாமி ரெட்டியார்

சுயேச்சை

20237

1962

கோதண்டராம பாகவதர்

காங்கிரஸ்

30773

1967

எ. சி. நரசிம்மன்

திமுக

38038

1971

எ. சி. நரசிம்மன்

திமுக

37682

1977

வி. அர்ஜுனன்

அதிமுக

33925

1980

ஏ. சி. சண்முகம்

அதிமுக

42928

1984

எம். சின்னகுழந்தை

அதிமுக

54653

1989

எ. சி. தயாளன்

திமுக

38558

1991

ஜெய்சன் ஜேக்கப்

அதிமுக

66355

1996

ஆர். சிவானந்தம்

திமுக

63014

2001

கே. இராமச்சந்திரன்

அதிமுக

66371

2006

ஆர். சிவானந்தம்

திமுக

69722

2011

பாபு முருகவேல்

தேமுதிக

88967

ஆண்டு

2ம் இடம்பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

1951

டபள்யு. எஸ். சீனிவாச ராவ்

காங்கிரஸ்

10329

1957

வி. கே. கண்ணன்

காங்கிரஸ்

18989

1962

எ. சி. நரசிம்மன்

திமுக

23055

1967

டி. பி. ஜெ. செட்டியார்

காங்கிரஸ்

17320

1971

எம். தருமராசன்

ஸ்தாபன காங்கிரஸ்

24599

1977

ஈ. செல்வராஜ்

திமுக

24703

1980

ஈ. செல்வராஜ்

திமுக

37877

1984

ஆர். சிவானந்தம்

திமுக

43620

1989

டி. கருணாகரன்

அதிமுக (ஜெ)

30891

1991

ஈ. செல்வராஜ்

திமுக

32043

1996

எம். சின்னகுழந்தை

அதிமுக

44835

2001

ஏ. சி. சண்முகம்

புதிய நீதி கட்சி

52889

2006

எ. சந்தானம்

அதிமுக

57420

2011

ஆர். சிவானந்தம்

திமுக

81001

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

R. சிவனாந்தம்

தி.மு.க

69722

2

A. சந்தானம்

அ.தி.மு.க

57420

3

D. ரமேஷ்

தே.மு.தி.க

6292

4

E. கங்காதாரன்

பி.என்.கே

3877

5

R. நல்லதம்பி

சுயேச்சை

1547

6

K. நாராயணன்

பி.ஜே.பி

1427

7

D. திருஞானந்தம்

சுயேட்சை

849

141134

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

R.M. பாபு முருகவேல்

தே.மு.தி.க

88967

2

R. சிவனாந்தம்

தி.மு.க

81001

3

P. கோபி

பி.ஜே.பி

1639

4

A. கணேசன்

பி.எஸ்.பி

1459

5

K. முருகவேல்

சுயேச்சை

1327

6

D. குமார்

சுயேச்சை

1033

7

S. பாலாஜி

சுயேச்சை

891

8

N. பாபு

சுயேச்சை

833

9

C. மலர்

சுயேச்சை

573

177723

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x