Published : 05 Apr 2016 15:56 pm

Updated : 23 May 2016 14:38 pm

 

Published : 05 Apr 2016 03:56 PM
Last Updated : 23 May 2016 02:38 PM

1 - கும்மிடிப்பூண்டி

1

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் முதல் தொகுதியாக விளங்குவது கும்மிடிப்பூண்டி தொகுதி. ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள இந்த தொகுதியில், கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய இரு வட்டங்களில் உள்ள 178 வருவாய் கிராமங்கள் அடங்கியுள்ளன.

கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை ஆகிய பேரூராட்சிகளையும் தன்னகத்தே கொண்டுள்ள கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை தொகுதியில் புகழ் பெற்ற பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் அமைந்துள்ளது.


பல தனியார் அனல் மின் நிலையங்கள், இரும்பு உருக்காலைகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகள் மற்றும் தமிழக அரசுவின் அம்மா குடி நீர் உற்பத்தி மையம், தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்டவை இத்தொகுதியில் உள்ளன.

வன்னியர், தலித் மக்கள் கணிசமாக வசிக்கும் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை தொகுதியில் சிறுபான்மை மொழியான தெலுங்கு மொழி பேசும் நாயுடு உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினரும் கணிசமாக வசிக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல், விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட இந்த தொகுதியில், நெல்லுக்கு அடுத்தப்படியாக காய்கறி மற்றும் கீரை வகைகள், பூக்கள் கணிசமாக விளைவிக்கப்படுகின்றன.

கும்மிடிப்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மற்றும் நிலத்தடி நீரில் அதிக மாசு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்று ஏற்கனவே தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், ஊத்துக்கோட்டையில் ஆரணி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கவேண்டும் என்பதும், கும்மிடிப்பூண்டி பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கவேண்டும் என்பதும் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை.

மேலும், விவசாயத்துக்கு தேவையான நீராதாரத்தை வழங்க ஏதுவாக தொகுதியில் உள்ள ஏரிகள், குளங்களை தூர்வாறவேண்டும் என்பதும் கும்மிடிப்பூண்டி தொகுதி விவசாயிகளின் தொடர் கோரிக்கையாக உள்ளது.

கடந்த 1957 முதல் 2011 வரை ( ஒரு இடைத்தேர்தல் உட்பட) நடந்த 14 தேர்தல்களில், 7 முறை அதிமுகவும், 4 முறை திமுகவும், ஒரு முறை சுதந்திரா கட்சியும், ஒரு முறை காங்கிரஸும், ஒரு முறை தேமுதிகவும் வெற்றி பெற்றுள்ளன. இதில், கடந்த 2011-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக வேட்பாளர் சி.எச். சேகர் 97,708 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கே.என். சேகர் 68, 452 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

கே.எஸ்.விஜயகுமார்

அதிமுக

2

சி.எச். சேகர்

மக்கள் தேமுதிக

3

கே.கீதா

தேமுதிக

4

எம்.செல்வராஜ்

பாமக

5

எம்.பாஸ்கரன்

பாஜக

6

ச.சுரேஷ்குமார்

நாம் தமிழர்

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

பேரூராட்சிகள்: 2 கும்மிடிப்பூண்டி - 15 வார்டுகள் ஊத்துக்கோட்டை } 15 வார்டுகள் கிராம ஊராட்சிகள்: 131

கும்மிடிப்பூண்டி ஒன்றியம் (61): அன்னநாயக்கன் குப்பம், ஆரம்பாக்கம், ஆத்துப்பாக்கம், அயநெல்லூர், பூதூர், செதில்பாக்கம், ஏடூர், எகுமதுரை, ஈகுவார்பாளையம், எளாவூர், ஏனாதி மேல்பாக்கம், எருக்குவாய், கெட்ணமல்லி, குருவராஜ கண்டிகை, கண்ணம்பாக்கம், கண்ணன்கோட்டை, காரணி, கீழ்முதலம்பேடு, கொள்ளானூர், குருவாட்டுச்சேரி, மாநெல்லூர், மாதர்பாக்கம், மங்களம், மங்காவரம், மெதிப்பாளையம், மேலக்கழனி, மேல்முதம்பேடு, முக்கரம்பாக்கம், நரசிங்கபுரம், நத்தம், நெல்வாய், நேமளூர், ஓபசமுத்திரம், பாதிரிவேடு, பாலவாக்கம், பல்லவாடா, பன்பாக்கம், பாத்தபாளையம், பெத்திகுப்பம், பெரிய ஓபுளாபுரம், பெரியபுலியூர், பெருவாயல், போந்தவாக்கம், பூவலை, பூவலம்பேடு, புதுகும்மிடிப்பூண்டி, புதுப்பாளையம், புதுவாயல், ரெட்டம்பேடு, சாணாபுத்தூர், சித்திராஜ கண்டிகை, சிறுபழல்பேட்டை, சிறுவாடா, சூரப்பூண்டி, சுண்ணாம்புகுளம், தண்டலசேரி, தேர்வழி, தேர்வாய், தோக்கமூர், வழுதிலம்பேடு, கரடிபுத்தூர்.

எல்லாபுரம் ஒன்றியம் (43): 43 பனப்பாக்கம், 82 பனப்பாக்கம், அக்கரம்பாக்கம், ஆலப்பாக்கம், அழிஞ்சிவாக்கம், அமிர்தாநல்லூர், அத்திகாவனூர், அத்திவாக்கம், ஆத்துப்பாக்கம், ஏனாம்பாக்கம், கல்பட்டு, கன்னிகைபேர், கிளாம்பாக்கம், குமரப்பேட்டை(ரால்லபாடி), லட்சிவாக்கம், மதுரவாசல், மாலந்தூர்,மாம்பள்ளம், மஞ்சங்காரணி, நெய்வேலி, பாகல்மேடு, பாலவாக்கம், பனையஞ்சேரி, பேரண்டூர், பெரியபாளையம், பெருமுடிவாக்கம், பூச்சி அத்திப்பேடு, பூரிவாக்கம், புன்னப்பாக்கம், செங்கரை, செஞ்சிஅகரம், சென்னாங்கரணி, சூளைமேனி, தாமரைகுப்பம், தண்டலம், தாராட்சி, திருகண்டலம், திருநிலை, தொளவேடு, தும்பாக்கம், வடமதுரை, வண்ணான்குப்பம், காக்கவாக்கம்.

பூண்டி ஒன்றியம் (27): பென்னாலூர்பேட்டை, ராமலிங்காபுரம், வேலம்மா கண்டிகை, மேலகரமனூர், நந்திமங்கலம், போந்தவாக்கம், அனந்தேரி, பெருதிவாக்கம், மாம்பாக்கம், பெருஞ்சேரி, கச்சூர், கூனிபாளையம், திம்மபூபாளபுரம், வெள்ளாத்தூர் கோட்டை, நெல்வாய், அம்மம்பாக்கம், சோமதேவன்பட்டு, வேலகாபுரம், மாமண்டூர், தேவாந்தவாக்கம், மயிலாப்பூர், நம்பாக்கம், ஆட்ரம்பாக்கம், ஓதப்பை, மெய்யூர்,கம்மவார்பாளையம்,ஆலப்பாக்கம்.

கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக 6 முறையும், திமுக 4 முறையும், சுதந்திரக் கட்சி, காங்கிரஸ், தேமுதிக ஆகியவை தலா 1 முறையும், வெற்றி பெற்றுள்ளது

இந்த தொகுதியில், 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக வேட்பாளர் சி.சேகர் 97,708 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பாமகவைச் சேர்ந்த கே.சேகர் 68,452 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

29/4/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

127974

பெண்

132866

மூன்றாம் பாலினித்தவர்

31

மொத்த வாக்காளர்கள்

260871

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

கும்மிடிபூண்டி சட்டமன்ற தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1957 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1957

கமலாம்பாள்

காங்கிரஸ்

9002

26.7

1962

எ. இராகவ ரெட்டி

சுதந்திரா கட்சி

19575

46.5

1967

கே. வேழவேந்தன்

திமுக

35887

52.57

1971

கே. வேழவேந்தன்

திமுக

43355

58.41

1977

ஆர் எஸ். முனிரத்தினம்

அதிமுக

32309

42.26

1980

ஆர் எஸ். முனிரத்தினம்

அதிமுக

41845

49.01

1984

ஆர் எஸ். முனிரத்தினம்

அதிமுக

55221

55.56

1989

கே. வேணு

திமுக

36803

37.33

1991

ஆர். சக்குபாய்

அதிமுக

61063

54.77

1996

கே. வேணு

திமுக

61946

49.69

2001

கே. சுதர்சனம்

அதிமுக

73467

56.07

2006

கே.எஸ். விஜயகுமார்

அதிமுக

63147

---

2011

சி.எச். சேகர்

தேமுதிக

97708

--

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1957

வேணுகோபால் ரெட்டி

சுயேச்சை

8908

26.42

1962

கே. கமலம் அம்மாள்

காங்கிரசு

18946

45.01

1967

கே. கமலம் அம்மாள்

காங்கிரசு

31527

46.19

1971

பி. ரெட்டி

நிறுவன காங்கிரசு

30875

41.59

1977

கமலம் அம்மாள்

ஜனதா கட்சி

21042

27.52

1980

கே. வேணு

திமுக

34019

39.84

1984

கே. வேழவேந்தன்

திமுக

43174

43.44

1989

கே. கோபால்

அதிமுக (ஜெ)

33273

33.75

1991

கே. வேணு

திமுக

28144

25.24

1996

ஆர் எஸ். முனிரத்தினம்

அதிமுக

40321

32.34

2001

கே. வேணு

திமுக

48509

37.02

2006

துரை ஜெயவேலு

பாமக

62918

---

2011

கே. சேகர்

பாமக

68452

--

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

விஜயகுமார்.கே.எஸ்

அதிமுக

63147

2

துரைஜெயவேலு

பாமக

62918

3

சி.ஹெச்.சேகர்

தேமுதிக

21738

4

ஆர்.சேகர்

சுயேச்சை

2147

5

கே.சேகர்

எஸ் பி

1096

6

முருகேசன்.டி

சுயேச்சை

779

7

வெங்கடேசன்.பி.

சுயேச்சை

762

8

நரசையா .எல்

பிஜேபி

662

9

முஹமது யூசுப்.ஏ

என் சி பி

635

10

அலெக்சாண்டர்.ஏ

பி எஸ் பி

567

11

பத்தின்னையா

சுயேச்சை

511

12

சேகர்.கே.சி.

சுயேச்சை

415

13

பரசுராமன்.ஆர்.

தி என்ஜேசி

266

14

ரகுபதி.ஜி

சுயேச்சை

226

15

சுந்தராம நாயுடு.டி.

சுயேச்சை

216

16

கோபால்.ஜி

சுயேச்சை

178

156263

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசைஎண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

C H சேகர்

தே முதி க

97708

2

K N சேகர்

பா ம க

68452

3

R. செல்வகுமார்

சுயேச்சை

1892

4

சக்கரவர்த்தி KR ஸ்ரீராமன் B

பா ஜ க

1883

5

G.முனி கிருஷ்ணன்

ஜே எம் எம்

1836

6

N . வேலு

சுயேச்சை

1462

7

G. அசோகன்

பு பா

1425

8

ராஜா ஏ.எம்.

சுயேச்சை

1114

9

M. சுதாகர்

குடியரசு

1228

10

P.சண்முகம்

சுயே

997

11

D. ஸ்ரீ நிவாசன்

பகுஜன்

835

12

s .ஏழுமலை

சுயே

487

179616



சட்டப்பேரவைத் தேர்தல்தமிழக தேர்தல் களம்கும்மிடிப்பூண்டி தொகுதி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

தவறவிடாதீர்

தேர்தல் 2016
copy

பொது copy

தேர்தல் 2016

More From this Author

x