Published : 29 Oct 2022 06:49 AM
Last Updated : 29 Oct 2022 06:49 AM
அரியலூர்: தா.பழூர் அருகே நிகழ்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கொலை வழக்கில் முக்கிய தொடர்புடைய ஒருவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சாமிநாதன்(37). இவர், கடந்த செப்.7-ம் தேதி அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் கிராமத்தில், தனது தங்கை திருமணத்துக்கு வந்தபோது, 6 பேர் கொண்ட கும்பலால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கில் 8 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும், 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய முக்கிய நபராக கருதப்படும் இளையராஜா(40) தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், இளையராஜாவை நேற்று முன்தினம் தா.பழூர் போலீஸார் கைது செய்தனர். இதில், இளையராஜாவின் சகோதரரை சாமிநாதன் கொலை செய்ததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, சாமிநாதனை இளையராஜா பழிக்குப் பழியாக கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT