Published : 10 Oct 2022 06:59 AM
Last Updated : 10 Oct 2022 06:59 AM

கோவை | ஆடு காணாமல்போன தகராறில் விவசாயி சுட்டுக்கொலை: இளைஞர் கைது

கோவை: கோவை மாவட்டம் காரமடை ரங்கராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி(58). விவசாயியான இவர் ஆடுகளையும் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இவரது ஆட்டுப்பட்டியில் இருந்த 2 ஆடுகள் காணாமல்போயின. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள அய்யாசாமி என்பவரது தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சின்னசாமியும், அய்யாசாமியும் மது அருந்தியுள்ளனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித்(28) அங்கு வந்துள்ளார். அவரிடம் தனது ஆடுகள் காணாமல்போனது குறித்து சின்னசாமி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு மற்றும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அய்யாசாமி இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார்.சிறிது நேரத்தில் ரஞ்சித் தனது வீட்டில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து சின்னசாமியை நோக்கி முதுகில் சுட்டார். இதில் குண்டுபாய்ந்து சம்பவ இடத்திலேயே சின்னசாமி உயிரிழந்தார். பின்னர் மதுபோதையில் தள்ளாடியபடியே தனது வீட்டுக்கு சென்று ரஞ்சித் தூங்கியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்த காரமடை போலீஸார், ரஞ்சித்தை கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x