Published : 31 Jul 2022 05:45 AM
Last Updated : 31 Jul 2022 05:45 AM
கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்தில் கூடலூர் அருகே வாடவயல் பகுதியில் கடந்த 2000-ம் ஆண்டு மின் வேலியில் சிக்கி சுமார் 15 வயதுடைய ஆண் யானை உயிரிழந்தது.
இது தொடர்பாக அந்த தோட்ட உரிமையாளர் மாணிக்கம் (64), பிரபாகரன் (64) மற்றும் ஹரிதாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை கூடலூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
கூடலூர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் ஆர்.ஷஷின்குமார், மாணிக்கம் மற்றும் பிரபாகரனுக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். குற்றம்சாட்டப்பட்ட மூன்றாம் நபரான ஹரிதாஸ் விடுவிக்கப்பட்டார்.
வனத்துறையினர் கூறும்போது, ‘‘இந்த வழக்கு 22 ஆண்டுகளாக கூடலூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வனத்துறையினர் பெரும் சிரமத்துக்கு இடையே வழக்கை நடத்தி வந்தோம். 22 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT