Published : 30 Apr 2022 07:20 AM
Last Updated : 30 Apr 2022 07:20 AM
திருப்பூர்: மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயதுசிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய, தாயின் 2-வது கணவர் உள்ளிட்ட 2 பேருக்கு 22 ஆண்டுகள் சிறையும், ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியைச் சேர்ந்த 13 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி, தனதுகுடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவரது தாயார், முதல் கணவரைப் பிரிந்த நிலையில் இரண்டாவதாக சங்கர் கணேஷ் (36) என்பவரை திருமணம் செய்தார். முதல்கணவருக்கு பிறந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியும், அவர்களுடன் வசித்து வந்தார்.
2019 மார்ச் 2-ல் வீட்டில் யாரும்இல்லாத நேரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை சங்கர்கணேஷ், வீட்டருகே வசிக்கும் ராமசாமி மகன் முருகேசன் (50),நல்லசாமி மகன் முருகேசன்(47) ஆகியோர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்.
இதுதொடர்பாக காங்கயம்அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போக்ஸோ பிரிவின்கீழ்வழக்கு பதிந்து மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் நீதிபதி சுகந்தி தீர்ப்புஅளித்தார். அதில், சங்கர் கணேஷ் மற்றும் நல்லசாமி மகன் முருகேசன் ஆகியோருக்கு தலா 22 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதமும், ராமசாமி மகன் முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT