Published : 01 Nov 2023 06:20 AM
Last Updated : 01 Nov 2023 06:20 AM
சென்னை: சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அண்ணா சாலை காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், “கடந்த மாதம் 6-ம் தேதி எனது மகளுக்கு செல்போன் செயலி மூலம் ரூ.5,000 அனுப்பினேன். ஆனால் பணம் சென்றடையவில்லை.
இதுகுறித்து வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டபோது, எதிர்முனையில் பேசிய நபர் எனது வங்கிக் கணக்கைக் கேட்டு, எனக்குத் தெரியாமல் என் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.88,682 எடுத்துள்ளார்.
எனவே, அந்த நபரை கைது செய்து பணத்தை மீட்டுத் தர வேண்டும்” என்று கூறி இருந்தார். இதுகுறித்து விசாரித்த போலீஸார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முகமது பெலால் என்பவரை ஜார்க்கண்ட் மாநிலத்தில் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT