Published : 16 Feb 2020 16:33 pm

Updated : 16 Feb 2020 17:54 pm

 

Published : 16 Feb 2020 04:33 PM
Last Updated : 16 Feb 2020 05:54 PM

'மாஸ்டர்' பாடலின் சாதனை: படக்குழுவினர் மகிழ்ச்சி

master-song

'மாஸ்டர்' படத்தின் 'ஒரு குட்டிக் கதை' பாடல் உலகளவில் அதிகம் பேர் பார்த்த பட்டியலில் 3 இடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் லலித் வாங்கியுள்ளார். அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை என்றாலும், விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள 'ஒரு குட்டிக் கதை' என்ற தலைப்பிலான பாடலை, காதலர் தின வெளியீடாக பிப்ரவரி 14-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட்டது படக்குழு.

முழுக்க ரசிகர்களுக்கு அட்வைஸ் பாணியில் இந்தப் பாடலின் வரிகளை எழுதியிருந்தார் அருண்ராஜா காமராஜ். விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல் வெளியான 24 மணி நேரத்தில் உலகளவில் அதிகம் பேர் பார்த்த வீடியோக்கள் பட்டியலில் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தச் சாதனையால் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளது படக்குழு. யூ-டியூப் பக்கத்தில் இதுவரை 10 மில்லியன் பார்வைகளைக் கடந்தது மட்டுமன்றி 1 மில்லியன் லைக்குகளையும் குவித்துள்ளது. விரைவில் இசை வெளியீட்டு விழா தொடர்பான அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவறவிடாதீர்

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

மாஸ்டர்மாஸ்டர் பாடல்ஒரு குட்டிக் கதை பாடல்விஜய்இயக்குநர் லோகேஷ் கனகராஜ்அனிருத்விஜய் சேதுபதிஅருண்ராஜா காமராஜ்மாஸ்டர் பாடல் சாதனை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

cartoon

ரிமூவ் கரோனா!

கார்ட்டூன்