ஆ.நல்லசிவன்
கடந்த 2014-ல் தொடங்கிய எனது ஊடகப் பயணத்தில் தற்போது ‘இந்து தமிழ் திசை’யில் பழநி நிருபராக பணியாற்றி வருகிறேன். 11 ஆண்டுகளில் புதிய சூழல், புதிய மனிதர்கள் என எனக்கு கிடைத்த அனுபவங்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம். பலவற்றையும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பாக எனது பணி இருக்கிறது.
செய்திகள், கட்டுரைகள் மூலமாக மக்களுக்கு சேவை செய்யும் ஒரு பணியாகவே, நிருபர் பணியை பார்க்கிறேன். என்னுடைய எல்லா திறமைகளையும் முழுமையாக பயன்படுத்தி இன்னும் சிறப்பாக பணியாற்ற விரும்புகிறேன்.