'அந்தாதூன்' ரீமேக்: இசையமைப்பாளராக இளையராஜா ஒப்பந்தம்?

'அந்தாதூன்' ரீமேக்: இசையமைப்பாளராக இளையராஜா ஒப்பந்தம்?
Updated on
1 min read

'அந்தாதூன்' தமிழ ரீமேக்கின் இசையமைப்பாளராக இளையராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அந்தாதூன்'. 2018-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதினையும் வென்றது.

இந்தப் படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற நடந்த போட்டியில், நடிகர் தியாகராஜன் வெற்றி பெற்று ரீமேக் பணிகளைத் தொடங்கியுள்ளார். இதில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளார். மோகன் ராஜா இயக்கவுள்ளார். இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த ரீமேக்கை அதிகாரபூர்வமாக அறிவிக்க விரைவில் பிரம்மாண்டமான பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது. இதனிடையே, இந்தப் படத்தின் இசையமைப்பாளராக இளையராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது

இளையராஜா - தியாகராஜன் இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்பதால், இந்த ரீமேக் தொடர்பாகக் கேட்ட போது உடனடியாக ஒப்புக் கொண்டுள்ளார். இந்தப் படத்திலும் நாயகன் பியோனா வாசிப்பவராக இருப்பார். ஆகையால், தமிழில் இளையராஜாவின் இசைப் பொருத்தமாக இருக்கும் எனவும் படக்குழு கருதியுள்ளது.

விரைவில் நடைபெறவுள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் பிரசாந்த்துடன் நடிக்கவுள்ள இதர நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவறவிடாதீர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in