Last Updated : 16 Aug, 2017 12:09 PM

 

Published : 16 Aug 2017 12:09 PM
Last Updated : 16 Aug 2017 12:09 PM

சாஹோ அப்டேட்: நாயகியாக ஷ்ரதா கபூர் ஒப்பந்தம்

பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் 'சாஹோ' படத்தின் நாயகியாக ஷ்ரதா கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'பாகுபலி 2' படத்தைத் தொடர்ந்து 'சாஹோ' படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் பிரபாஸ். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. சுஜீத் இயக்கும் இப்படத்தை வம்சி மற்றும் பிரமோத் இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

பிரபாஸ் உடன் நாயகியாக நடிப்பதற்கு பல்வேறு முன்னணி நாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு. 'பாகுபலி 2' படத்தைத் தொடர்ந்து மீண்டும் பிரபாஸுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்து வருவதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், 'சாஹோ' படத்தின் நாயகியாக ஷ்ரதா கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறது. இப்படத்தின் வில்லனாக நீல் நிதின் முகேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பிரபாஸ் - நீல் நிதின் முகேஷ் இருவருமே தங்களுடைய கதாபாத்திரத்திற்காக கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக மதி, கலை இயக்குநராக சாபு சிரில் மற்றும் இசையமைப்பாளராக சங்கர் -இசான் - லாய் இணை பணிபுரியவுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x