Published : 01 Sep 2018 09:32 AM
Last Updated : 01 Sep 2018 09:32 AM

அஜித் – சிவா கூட்டணி பிரிகிறது

லிங்குசாமி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் ஒரு திரைப்படம் எடுக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், இந்த படத்தை ’விஸ்வாசம்’ பட இயக்குநர் சிவாவை வைத்து இயக்க ஸ்டுடியோ கிரீன் முடிவு செய்துள்ளது. அஜித்தின்  ‘விஸ்வாசம்’ படத்தை அடுத்து இப்படத்தின் வேலைகளில் சிவா கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர் கூட்டணி என்று கூறப்பட்டு வந்த அஜித் - சிவா இருவரும் ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘விஸ்வாசம்’ ஆகிய 4 படங்களை அடுத்து தற்போது வெவ்வேறு களத்தில் பயணிக்கத் தொடங்குவதும் உறுதியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x