Published : 06 Oct 2018 01:13 PM
Last Updated : 06 Oct 2018 01:13 PM

டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ஜீ.வி.பிரகாஷ் படம்

ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘சர்வம் தாளமயம்’ படம், டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது.

ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சர்வம் தாளமயம்’. ஜீ.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி, வினீத், டிடி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

மிருதங்க வித்வான் ஒருவரிடம் இருந்து கலையை கற்றுக்கொள்ள விரும்புகிறான் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன். அவனுடைய நிலையைக் காரணம் காட்டி வித்வானிடம் இருந்தும், கர்நாடக இசை சமூகத்தில் இருந்தும் நிராகரிக்கப்படுகிறான்.

சாதிப் பிரச்சினையைத் தாண்டி அவனின் இசை ஆசை நிறைவேறியதா என்பதுதான் படத்தின் கதை. காஷ்மீர், ஷில்லாங், ஜெய்ப்பூர், கேரளா உள்ளிட்ட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

இந்தப் படம், 31வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியுள்ளது. இம்மாதம் (அக்டோபர்) 25-ம் தேதி தொடங்கும் இந்தத் திரைப்பட விழா, அடுத்த மாதம் (நவம்பர்) 3-ம் தேதி வரை நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x