Last Updated : 19 Feb, 2018 12:33 PM

 

Published : 19 Feb 2018 12:33 PM
Last Updated : 19 Feb 2018 12:33 PM

விசுவாசம் அப்டேட்: மார்ச் மாதத்திலேயே படப்பிடிப்பு தொடக்கம்

அஜித் நடிக்கவுள்ள 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதமே தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

'விசுவாசம்' படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முழுமையாக அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட படக்குழு முடிவு செய்து பணிபுரிந்துவருகிறது. இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாத இறுதியில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், மார்ச் 2-ம் வாரத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்க தற்போது படக்குழு முடிவு செய்திருக்கிறது.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. முதன் முறையாக அஜித் படத்திற்கு இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'பில்லா', 'ஏகன்', 'ஆரம்பம்' ஆகிய படங்களுக்குப் பிறகு 'விசுவாசம்' படத்தின் மூலம் நான்காவது முறையாக அஜித்துடன் நயன்தாரா இணைந்து நடிக்கிறார். 2018 தீபாவளிக்கு 'விசுவாசம்' வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x