Published : 31 Jan 2023 04:17 AM
Last Updated : 31 Jan 2023 04:17 AM

ஜனவரி மாத நிலவரப்படி புதுச்சேரி அரசின் கடன் ரூ.9,369 கோடி

பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு ஜனவரி மாத நிலவரப்படி ரூ. 9,369 கோடி கடன் உள்ளது.

புதுச்சேரி அரசு நடப்பு நிதியாண்டின் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான திட்டக்குழு கூட்டத்தில் பட்ஜெட் தொகையாக ரூ. 11,600 கோடி நிர்ணயித்து மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.

இது கடந்த பட்ஜெட்டை விட ரூ. 1,000 கோடி அதிகம். திட்டக்குழு கூட்டத்தில் தரப்பட் டப்பட்ட அறிக்கையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்த கடன் நிலுவைத் தொகையில், பெரும்பாலான தொகை திறந்த சந்தைக் கடன்கள் (OMB) மூலம் திரட்டப்பட்டது, அதாவது இந்திய ரிசர்வ் வங்கி மூலம் தேதியிட்ட பத்திரங்களை (மாநில மேம்பாட்டுக் கடன்கள்) ஏலம் விடப்பட்டது.

ஜனவரி 20-ம் தேதி நிலவரப்படி, திறந்த சந்தை கடன்கள் மூலம் ரூ. 7,980 கோடி கடன் நிலுவையில் உள்ளது. சிறுசேமிப்புத் திட்டத்தில் கடன் வாங்கிய மீதித் தொகை ரூ.594 கோடி, திட்டமில்லாத கடன் ரூ. 219 கோடி , விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி கடன் ரூ. 149 கோடி மற்றும் பிற நிறுவனங்களுக்கு அரசு செலுத்த வேண்டிய தொகை ஆகியவை உள்ளன.

நிலுவையில் உள்ள கடனைக் காட்டும் புள்ளிவிவரங்கள், நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட கடன் வரம்புகளுக்குள் புதுச்சேரி உள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். அவர்கள் மேலும் கூறுகையில், “சட்டத்தின் விதிகளின்படி, புதுச்சேரி அதன் வரையறுக்கப்பட்ட வரி மற்றும் வரி அல்லாத வருவாய் ஆதாரங்களுடன் கடனானது 25 சதவீதத்தை கடக்க கூடாது.

நடப்பு நிதியாண்டில், நமது கடன் விகிதம் 24.28% ஆகும். சட்டப்பேரவை கொண்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரி நான்காவது இடத்திலுள்ளது. முக்கியமாக புதுச்சேரியின் மரபு கடன் (2007 இல் ஆர்பிஐயில் தனி கணக்கு தொடங்கப்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட கடன்கள்} வெகுவாக குறைந்துள்ளது.

கடந்த 2007-ல் நிலுவைக் கடன் சுமார் ரூ. 2,176 கோடியாக இருந்தது. கடந்தாண்டு கடைசி மாதம் வரை நிர்வாகம் சுமார் ரூ. 1,558 கோடி வரை செலுத்தியுள்ளது. இப்போது இருப்பில் உள்ள ரூ. 618 கோடியை மரபுக் கடனாக திருப்பிச் செலுத்த வேண்டும். இந்த மொத்த நிலுவையில், ரூ. 425 கோடி தேசிய சிறுசேமிப்பு நிதியிலிருந்து பெறப்பட்ட கடனாகும்" என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x