Published : 26 Dec 2022 04:10 AM
Last Updated : 26 Dec 2022 04:10 AM

‘மதுரை உத்சவ் - கிராப்ட்’ கண்காட்சி தொடக்கம்

மதுரை உத்சவ்-கிராப்ட் கண்காட்சியை பார்வையிட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர். படம்: நா.தங்கரத்தினம்

மதுரை: மதுரை ராஜா முத்தையா மன்றத் தில் சிப்போ மற்றும் நபார்டு வங்கி சார்பில் ‘மதுரை உத்சவ்-கிராப்ட்’ கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் நேற்று தொடங்கி வைத்தார்.

சிப்போ தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜகோபால், நபார்டு வங்கி மதுரை மாவட்ட வளர்ச்சி மேலாளர் சக்தி பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்காட்சியில் சிப்போ பொதுமேலாளர் மு.பழனிவேல் முருகன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) காளிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். நேற்று தொடங்கிய இக்கண்காட்சி டிச. 29வரை 5 நாட்கள் நடைபெறும்.

கண்காட்சியில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கர்நாடகா, புதுச்சேரியிலிருந்தும் 100 தொழில் முனைவோர் தங்களது தயாரிப்புகளை சந்தைப்படுத்தி உள்ளனர்.

இதில், ஆர்கானிக் பொருட்கள், மண்பாண்டங்கள், டெரக்கோட்டா அலங்காரப் பொருட்கள், உணவு, மசாலா பொருட்கள், கைவினைப் பொருட்கள், சிறுமலை காபி, மிளகு, நர்சரி பொருட்கள், திருப்புவனம் கைத்தறி பட்டுப் புடவைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இடம் பெற்றுள்ளன. தினமும் காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சி நடைபெறும். அனுமதி இலவசம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x