Published : 02 Oct 2015 11:56 AM
Last Updated : 02 Oct 2015 11:56 AM

இவரைத் தெரியுமா?- ஹெச்.எஸ்.உபேந்திரா காமத்

$ தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2013ல் இந்த பொறுப்பேற்றார். மூன்று ஆண்டுகள் இந்த பொறுப்பில் இருப்பார்.

$ விஜயா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவராக 2011 முதல் 2013 வரை செயல்பட்டவர். கனரா வங்கியின் செயல் இயக்குநராக 2009 முதல் 2011 வரை பணியாற்றினார்.

$ வங்கித்துறையில் 40 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் முதன் முதலில் பணிக்குச் சேர்ந்தவர். இந்த வங்கியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியவர். துணைப் பொது மேலாளர், பொது மேலாளர் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

$ கேன் பேங்க் வென்ச்சர் கேபிடல் நிறுவனத்தில் இயக்குநர் குழுவில் உள்ளார். கேன்பேங்க் பேக்டர்ஸ் நிறுவனத்தில் இயக்குநராகவும் பணியாற்றியவர்.

$ வங்கித்துறை சார்ந்து பல நாடுகளிலும் பணியாற்றியவர். கருவூலம், கார்ப்பரேட் பைனான்ஸ், சிறு குறு தொழில் வங்கி, ரிஸ்க் மேனேஜ்மென்ட் போன்ற துறைகளில் வல்லுனர்.

$ இந்திய வங்கியாளர் சங்கம் மற்றும் ரிசர்வ் வங்கியில் முக்கிய குழுக்களில் உறுப்பினராகவும் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x