Published : 21 May 2015 10:24 AM
Last Updated : 21 May 2015 10:24 AM

மோட்டோ-இ 4ஜி வகை செல்போன் அறிமுகம்

சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மோட்டோஇ 4ஜி வகை செல்போனை மோட்டோ ரோலா நிறுவனம் வெளியிட்டது.

முன்னணி இணையதள நிறுவன மான பிளிப்கார்ட்டில் மட்டுமே இந்த செல்போன் விற்பனைக்கு கிடைக்கும். கடந்த ஆண்டு 30 லட்சம் செல்போன்கள் விற்பனை ஆனதாக நிறுவனத்தின் முதன்மை சந்தைப் பிரிவு இயக்குநர் மார்குஸ் பாரஸ் தெரிவித்தார்.

மேலும் செல்போனை அறிமுகப்படுத்தி பேசிய இவர், இணையதள வர்த்தகம் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் பிளிப்கார்ட் மூலம் விற்பனை செய்கிறோம்.

சில்லரை விற்பனை அல்லது விநியோகஸ்தர்கள் மூலமான விற்பனையில் உடனடி கவனம் செலுத்தவில்லை என்று குறிப்பிட்டார்.

மேக் இன் இந்தியா திட்டத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் உற்பத்தி ஆலை தொடங்கும் எண்ணம் உள்ளதா என்கிற கேள்விக்கு தற்போது அப்படியான எண்ணம் இல்லை. சந்தையை பொறுத்து யோசிக்கப்படும் என்றார்.

மோட்டோஇ 4ஜி வகை ரூ.7999க்கும், மோட்டோஇ 3ஜி வகை ரூ.6999க்கும் பிளிப்கார்ட் இணையதளத்தில் கிடைக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x