Published : 14 Nov 2014 10:40 AM
Last Updated : 14 Nov 2014 10:40 AM

திலிப் ஜி பிரமள் - இவரைத் தெரியுமா?

$ டிஜிபி குழும நிறுவனங்களின் தலைவர். இதில் டிஜிபி செக்யூரிட்டிஸ், அரிஸ்டோகிராட் லக்கேஜ் இருக்கின்றன. மேலும் விஐபி இண்டஸ்ட்ரீஸ், புளோபிளாஸ்ட் நிறுவனங்களின் தலைவராக கடந்த மே 2013 முதல் இருக்கிறார்.

$ இதற்கு முன்பு பல நிறுவனங்களின் இயக்குநர் குழுவிலும் இருந்திருக்கிறார்.

$ மும்பை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டம் பெற்றவர். முடித்தவுடன் தங்களுடைய குடும்ப நிறுவனமான மொரார்ஜீ மில்ஸ் நிறுவனத்தில் இணைந்தார்.

$ இந்திய வர்த்தக சங்கம், அனைந்திந்திய பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிவற்றில் தலைவராக இருந்திருக்கிறார்.

$ கடந்த 15 மாதங்களில் தனது உடல் எடையை 50 கிலோ எடையை குறைத்திருக்கிறார்.

$ நான் பணம் செலவு செய்வதற்கோ சொகுசாக இருப்பதற்கோ தயங்கியதில்லை, ஆனால் அதைவிட நேரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். மும்பையில் இருந்து டெல்லி செல்ல 25,000 ரூபாய் கொடுத்து முதல் வகுப்பில் செல்வதை விட 6,000 ரூபாய் கொடுத்து இரண்டாம் வகுப்பில்தான் செல்வேன் என்று கூறியிருப்பவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x