

மதுரை: மதுரை தமுக்கத்தில் செப்.30, அக்டோபர் 1, 2 ஆகிய மூன்று நாட் கள் ஆட்டோ எக்ஸ்போ 2023 நடைபெறுகிறது.
இது குறித்து ஆட்டோ எக்ஸ்போ சங்கச் செயலாளர் டி.சிதம்பரம், தமிழ்நாடு ஆட்டோ மொபைல் அலைடு இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் தலைவர் விஎம். ராஜேஷ்வரன், தமிழ்நாடு மோட்டார் பார்ட்ஸ் டீலர் அசோசியேஷன் தலைவர் கே.ஏ.சிதம்பரம், எக்ஸ்போ ஒருங்கிணைப்பாளர் ரவி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு ஆட்டோ மொபைல் மற்றும் அலைடு இண்டஸ்ட்ரீஸ் ஃபெடரேஷனுடன், தமிழ்நாடு மோட்டார் பார்ட்ஸ் அசோசி யேஷன் (மதுரை) இணைந்து ஆட்டோ எக்ஸ்போவை நடத்துகிறது. மதுரையில் நடக்கும் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் நாடு முழுவதும் இருந்தும் முன்னணி வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் பங்கேற்கிறார்கள். 140 ஸ்டால்கள் அமைத்துள்ளோம்.
புதிய தொழில் நுட்பங்கள் பற்றியும், எலக்ட்ரிக்கல் வாகனங் கள் பற்றியும் தெரிந்து கொள்ள இந்த ஆட்டோ எக்ஸ்போ ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். மதுரையில் முதன்முறையாக 1947-ம் ஆண்டுக்கு முன் உள்ள வாகனங்கள், வின்டேஜ் பைக்குகள் மற்றும் வின்டேஜ் கார்களை காட்சிப் படுத்த உள்ளோம். இந்த எக்ஸ்போவில் பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.