Published : 17 Apr 2023 05:48 AM
Last Updated : 17 Apr 2023 05:48 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: உங்கள் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளை
களின் அடிமனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படுவீர்கள்.

ரிஷபம்: அதிரடி திட்டங்களை தீட்டி செயல்படுத்துவீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம், அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்: பிரபலங்களின் சந்திப்பும், அதனால் ஆதாயமும் உண்டு. அரசு, வங்கி தொடர்பான காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக் கசப்புகள் விலகும்.

கடகம்: குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படுங்கள். பணம், நகை, முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள்.

சிம்மம்: இங்கிதமாக பேசி கடினமான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அறி வுரையை ஏற்று நடப்பார்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். ஆன்மிகம், யோகாவில் நாட்டம் ஏற்படும்.

கன்னி: பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். அவர்களது எதிர்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவு களை எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரத்தில் நல்ல திருப்பம் ஏற்படும்.

துலாம்: முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீண்டநாள் ஆசைகள் பூர்த்தியாகும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் உண்டாகும். பெற்றோர் உடல்நிலையில் முன்னேற்றம் உண்டு.

விருச்சிகம்: மனதில் புதிய எண்ணங்கள், நம்பிக்கை தோன்றும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பல வகையிலும் பண வரவு உண்டு. கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.

தனுசு: எதிர்பாராத செலவுகள் வரும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். உங்கள் பேச்சுத் திறமை
யால், முக்கியமான காரியங்களை விரைந்து முடிப்பீர் கள். தியானம், யோகாவில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மகரம்: கணவன் - மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவு, பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

கும்பம்: தடைபட்ட வேலையை, உங்கள் வித்தியாச அணுகு முறையால் முடித்துக் காட்டுவீர்கள். உங்கள் அவசர முடிவுகள்தான் சில பிரச்சினைக்கு காரணம் என்பதை உணர்வீர்கள். வெளி உணவு வேண்டாம்.

மீனம்: நீங்களே எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு பார்க்கவேண்டி வரும். உறவினர்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த பணம் கைக்கு வரும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x