Published : 12 Jun 2023 05:26 AM
Last Updated : 12 Jun 2023 05:26 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: புதிய நபர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடி வருவார்கள். பழைய நண்பர்களால் வீண் தொல்லைகள் அதிகமாகும்.

ரிஷபம்: எக்காரியத்திலும் வெற்றி கிடைக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். பங்குச் சந்தை வகையில் அனுகூலம் உண்டு. வாகனச் சேர்க்கை ஏற்படும். வீடு வாங்க கடனுதவி கிடைக்கும்.

மிதுனம்: எதிர்பாராத வகையில் பணவரவு, பொருள் வரவு உண்டு. மனைவி வழி உறவினர்கள் மத்தியில் மரியாதை, அந்தஸ்து உயரும். வீடு வாங்குவது, விற்பது நினைத்தபடி முடியும்.

கடகம்: உங்கள் சமயோசித புத்தியால், எடுத்த காரியத்தை சிறப்பாக முடிப்பீர்கள். மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு உண்டாகும்.

சிம்மம்: பிள்ளைகளை அன்பால் அரவணைத்துச் செல்வீர்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். தொண்டை புகைச்சல், காய்ச்சல் வந்து நீங்கும். மனைவியுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.

கன்னி: மனைவி வழி உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். நட்பு வட்டம் விரிவடையும். தந்தை வழி சொத்துகள் கைக்கு வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள்.

துலாம்: போட்டி, சவால்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பங்கள் நீங்கி அமைதி திரும்பும். பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள். எதிலும் பொறுமை தேவை.

விருச்சிகம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு, தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும்.

தனுசு: பழைய சிக்கல்களுக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். வீட்டில் கழிவுநீர், குடிநீர் பிரச்சினைகள் தீரும். நட்பு வட்டம் விரிவடையும். வெளி வட்டாரத்தில் புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

மகரம்: குடும்பத்தினருடன் கலந்துபேசி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். விலகிச் சென்ற சகோதர உறவுகள் விரும்பி வந்து பேசுவார்கள். நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவியை செய்வீர்கள்.

கும்பம்: உங்கள் பேச்சில் உற்சாகமும், செயலில் வேகமும் கூடும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பல வகையிலும் பணம் வரும். அதற்கேற்ப, செலவுகளும் சற்று கூடும்.

மீனம்: வீண் செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேச்சில் நிதானம் தேவை. அலைச்சலுடன் ஆதாயமும் உண்டு.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x