குள.சண்முகசுந்தரம்
விகடனின் மாணவப் பத்திரிகையாளராக 1991-ல் பத்திரிகை துறையில் தடம்பதித்த நான், சுமார் 20 ஆண்டு காலம் தென் மாவட்டங்களில் செய்தியாளராகப் பணிபுரிந்திருக்கிறேன்.
மதுரையை மையப்படுத்திய எனது பத்திரிகைப் பணியில் பல முக்கிய நிகழ்வுகளில் தனித்துவமான செய்திகளை தந்து தனி முத்திரை பதித்திருக்கிறேன். அதற்காக நான் எதிர்கொண்ட பிரச்சினைகளும் சவால்களும் நிறையவே உண்டு. அவைதான் இப்போது என்னை ‘இந்து தமிழ் திசை’யின் அசிஸ்டென்ட் எடிட்டர் அந்தஸ்துக்கு உயர்த்தி இருக்கிறது.
இதழியல் துறையில் 34 ஆண்டுகளைக் கடந்துவிட்டாலும் இத்துறையில் இன்னும் சாதிக்க வேண்டும் என்ற தாகம் நிறையவே இருப்பதால் சளைக்காமல் ஓடிக் கொண்டிருக்கிறேன்.