கூட்டணி தர்மத்துக்காக  பல்லைக் கடித்துக் கொண்டு இருக்கிறதா திமுக? - திருச்சி சிவா பதில் | நேர்காணல்

கூட்டணி தர்மத்துக்காக பல்லைக் கடித்துக் கொண்டு இருக்கிறதா திமுக? - திருச்சி சிவா பதில் | நேர்காணல்

Published on

அதிமுக கூட்டணியில் தேர்தல் நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்தான எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கிறது ஆளும் திமுக. இன்னமும் சொந்தக் கட்சியை தேர்தலுக்காக தயார்ப்படுத்தும் பணிகளிலேயே அக்கட்சி துரிதமாக இருக்கும் நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்பி-யிடம் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக பேசினோம்.

Q

ஐந்தாண்டுகள் நிறைவில், மக்களுக்கு சிறப்பான ஆட்சியைத் தந்திருக்கிறோம் என்ற திருப்தி இருக்கிறதா?

A

நிச்​சய​மாக. மிகச் சிறந்த, அரு​மை​யான ஆட்​சி​யைத் தந்​திருக்​கி​றோம். எல்​லாத் தரப்பு மக்​களும் மகிழ்​வோடும் மனநிறைவோடும் இருக்​கி​றார்​கள். தேர்​தலில் வெற்றி பெற்​றது​மே, “எங்​களுக்கு வாக்​களித்​தவர்​களுக்​கும் வாக்​களிக்​காதவர்​களுக்​கும் சேர்ந்தே நல்​லாட்சி தரு​வோம்” என்று சொன்​னார் முதல்​வர். அது​தான் அண்​ணா​வின் பாணி. அதன்​படி, எல்​லாருக்​கும் எல்​லாம் என்​பது போல் கட்சி வேறு​பாடு இல்​லாமல் அனை​வ​ருக்​கு​மான திட்​டங்​களைத் தரும் ஆட்​சி​யாக இது இருக்​கிறது. திட்​டங்​கள் என்​பது நாட்​டுக்​கும் மக்​களுக்​கு​மானது. அந்த வகை​யில், 5 ஆண்​டு​களில் மனநிறை​வான ஆட்​சி​யைத் தந்​திருக்​கிறது திமுக.

Q

ஆனால், சில விஷயங்களில் சொன்னதைச் செய்யாமலும் விட்டுவிட்டது திமுக என்ற குற்றச்சாட்டும் இருக்கிறதே..?

A

அதாவது... அரசாங்​கம் கையில் மந்​திரக் கோல் எது​வும் இல்​லை. நாங்​கள் பொறுப்​பேற்ற போது, மிகுந்த நிதிப்​பற்​றாக்​குறை இருந்​தது. அதையெல்​லாம் சமாளித்து திட்​டங்​களை பெரிய அளவுக்கு நிறை​வேற்றி இருக்​கி​றோம். குற்​றம் சொல்​பவர்​கள், எவ்​வளவு செய்​தா​லும் இன்​னும் பாக்கி இருக்​கிறது என்று தான் சொல்​வார்​கள். ஒரு பெரிய வெள்​ளைச் சட்​டை​யில் சின்​ன​தாய் ஓர் ஓரமாக எதாவது இருப்​ப​தைச் சொல்​வது போல் தான் இது. அரசை பாராட்ட மனமில்லை என்​றாலும் குறை சொல்​லாமல் இருக்​கலாம். ஆனால், அவர்​கள் எதிர்க்​கட்​சிகள். இப்​படித்​தான் பேசு​வார்​கள். ஆனால், உண்மை மக்​களுக்​குத் தெரி​யும்.

Q

அப்படியானால், ஆட்சிக்கு எதிரான மனநிலை அறவே இல்லை என்று சொல்கிறீர்களா?

A

இல்லை என்று சொல்​லவே முடி​யாது. ஏனென்​றால் எதிர்க்​கட்சி என்று ஒன்று இருக்​கு​மா​னால் அவர்​கள் எங்​களுக்கு எதி​ரான மனநிலை​யில் தான் இருப்​பார்​கள். இன்​னொரு கட்​சி​யின் அரசாங்​கத்தை முழு​மை​யாகப் பாராட்டி விட்​டால் அப்​புறம் அங்கே ஜனநாயகம் இருக்​காது. அதனால், அவர்​களுக்​கான உரிமை​யில் பேசுகி​றார்​கள். ஆனால், அதில் உண்மை இருக்​கிற​தா, நியா​யம் இருக்​கிறதா என்​பதை எல்​லாம் ஆராய வேண்​டிய பொறுப்பு மக்​களுக்கு இருக்​கிறது.

Q

பிறகு எந்த நம்பிக்கையில், “நாங்கள் தான் நூற்றுக்கு இருநூறு சதவீதம் ஆட்சி அமைப்போம் என்கிறார் பழனிசாமி?

A

நூற்​றுக்கு நூறு தான் போட​முடி​யும்; இருநூறெல்​லாம் போட முடி​யாது. யாருமே தாங்​கள் தோற்​று​விடு​வோம் என்று சொல்​லி​விட மாட்​டார்​கள். ஆனால், யதார்த்​தம் என்று ஒன்று இருக்​கிறது. நாங்​கள் மிகுந்த நம்​பிக்​கையோடு இருக்​கக் காரணம், மக்​கள் என்ன காரணத்​துக்​காக எங்​களை நம்பி ஆட்​சியை ஒப்​படைத்​தார்​களோ அந்த நம்​பிக்​கை​யைக் காப்​பாற்றி இருக்​கி​றோம். மக்​களின் தேவை​கள் என்ன என்​பதை முன்​கூட்​டியே அறிந்து அதையெல்​லாம் அவர்​களைத் தேடிப்​போய் வழங்கி வரு​கி​றோம்.

Q

நடிகர் விஜய்யை மையப்படுத்தியே தமிழக அரசியல் கட்டமைக்கப்படுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

A

நாங்​கள் ஒரு பேருந்தை ஓட்​டிக்​கொண்டு இருக்​கி​றோம். எங்​களை நம்பி அதில் 100 பேர் பயணம் செய்​கி​றார்​கள். அவர்​களை பத்​திர​மாக இடம் சேர்ப்​ப​தற்கு கவன​மாக அந்​தப் பேருந்தை இயக்க வேண்​டிய கடமை எங்​களுக்கு இருக்​கிறது. அதில் தான் நாங்​கள் இப்​போது கவனம் செலுத்தி வரு​கி​றோம்.

Q

விஜய்யை வைத்து திமுக-வை நிர்பந்திக்க நினைக்கிறதோ காங்கிரஸ்?

A

இதெல்​லாம் கற்​பனை. காங்​கிரஸ் மூத்த தலை​வர்​களு​டன் நான் நெருங்​கிப் பழகி வருபவன். அப்​படி​யான எண்​ண​வோட்​டமே அவர்​களுக்கு இல்​லை. திமுக - காங்​கிரஸ் கூட்​டணி என்​பது உணர்​வுபூர்​மான, மனமொத்த, தெளி​வான சிந்​தனை​யுடன் பயணிக்​கும் கூட்​ட​ணி​யாக இருக்​கிறது.

Q

பிரவீன் சக்கரவர்த்தி, திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் ஏதும் குழப்பம் உண்டாக்க நினைக்கிறாரோ?

A

நான் காங்​கிரஸ் மூத்த தலை​வர்​களு​டன் அமர்​கிறேன்​... அவர்​களோடு அளவளா​வு​கிறேன். அதனால் அவர்​களு​டைய மனநிலை எனக்​குத் தெரி​யும்.

Q

விஜய்யை ‘கேம் ஸ்பாய்லர்’ என விமர்சித்திருக்கும் பியூஷ் கோயல், அவரை பாஜக-வினர் யாரும் விமர்ச்சிக்க வேண்டாம் என்றும் சொல்லி இருக்கிறாராமே?

A

இதற்​கான விளக்​கத்தை அவரிடமே நீங்​கள் கேட்​கலாம்.

Q

திராவிடக் கட்சிகளில் ஒன்றை உறவாடியும் இன்னொன்றை களமாடியும் பாஜக அழிக்க நினைக்கிறது என்கிறார்களே..?

A

எங்​களோடு அவர்​கள் களமாட வரலாம். ஆனால், இது அவர்​களுக்​கான களமே அல்ல. எந்த ஆட்​டத்​துக்​குப் போனாலும் அந்த விளை​யாட்​டைப் பற்றி தெரிந்​திருக்க வேண்​டும்; அந்த மைதானத்​தைப் பற்றி அறிந்​திருக்க வேண்​டும். அவர்​கள், குழப்​பம் விளைவிக்க நினைத்து ஈடு​பட்ட எந்​தக் காரிய​மும் இங்கே ஈடேற​வில்​லை. காரணம், ஒற்றை மொழி​யாக நாங்​கள் வளர்த்து வைத்​திருக்​கிற சமூக நல்​லிணக்​கம். இங்​கே, சாதி - சமயங்​களைக் கடந்து மக்​கள் ஒற்​றுமை உணர்​வுடன் வாழ்​வ​தால் அவர்​களின் எந்த முயற்​சி​யும் பலனளிக்​க​வில்​லை; பலன் அளிக்​காது.

Q

கூட்டணி தர்மத்துக்காக பல விஷயங்களில் பல்லைக் கடித்துக் கொண்டு இருக்கிறதா திமுக?

A

அப்படி எல்லாம் கிடையவே கிடையாது. கூட்டணியில் இருக்கும் அனைவருமே ரொம்பவே இணக்கமாக, சுமுகமாக, ஒரு குடும்பக் கூட்டணியைப் போலத்தான் இருக்கிறோம். அதை பொறுக்க முடியாதவர்கள் தான் கற்பனைக் கதைகளைக் கிளப்புகிறார்கள்.

Q

இத்தனை நாளும், இறந்தவர்களின் வாக்குகள் மூலமாகவே திமுக ஆட்சிக்கு வந்ததாக அதிமுக-வும் பாஜக-வும் செய்யும் பரப்புரைக்கு திமுக தக்க பதில் சொல்லாமலே இருக்கிறதே?

A

அனைத்​துக்​கும் பதில் சொல்ல வேண்​டிய அவசி​யம் இல்​லை. தவறான வாக்​கு​கள் உள்​ளன​வா, எங்​களுக்​கான வாக்​கு​கள் விடு​பட்​டுள்​ளனவா என்​பதை எல்​லாம் கவன​மாக கண்​காணித்து உரிய நடவடிக்​கை​களை எடுத்து வரு​கி​றோம். இதெல்​லாம் தெரி​யாமல், பேசுகிறவர்​கள் எதை வேண்​டு​மா​னாலும் பேசலாம். அதைக்​கூட செய்​யாமல் அவர்​கள் என்ன செய்​வார்​கள்​?

கூட்டணி தர்மத்துக்காக  பல்லைக் கடித்துக் கொண்டு இருக்கிறதா திமுக? - திருச்சி சிவா பதில் | நேர்காணல்
“மதவாத அரசியல் செய்வது திமுக தான்” - பாஜக மாநில துணை தலைவர் டால்பின் ஸ்ரீதர் தடாலடி நேர்காணல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in