‘கண்டுகொள்ளாத திராவிடக் கட்சிகள்…’ - களத்தை தொலைத்துவிட்டு நிற்கிறாரா ராமதாஸ்?

‘கண்டுகொள்ளாத திராவிடக் கட்சிகள்…’ - களத்தை தொலைத்துவிட்டு நிற்கிறாரா ராமதாஸ்?
Updated on
2 min read

தி​முக தரப்​பில் ராம​தாஸ் தரப்​புடன் பேசப்​பட்டு வரு​வ​தாகச் சொல்​லப்​பட்டு வந்த நிலை​யில், “தங்​களு​டன் யாரும் கூட்​டணி தொடர்​பாகப் பேச​வில்​லை” என மறுத்​திருக்​கும் ராம​தாஸ், தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யுட​னான தங்​களின் உறவு தொடர்​வ​தாக அறி​வித்​திருப்​பதும் பல்​வேறு சந்​தேகங்​களை எழுப்பி இருக்​கிறது.

“பாமக​வுக்கு அத்​தா​ரிட்டி நான் தான். கூட்​டணி பேசுவ​தாக இருந்​தால் யாராக இருந்​தா​லும் என்​னிடம் தான் வரவேண்​டும்” என ராம​தாஸ் சொல்லி வந்த நிலை​யில், அதைப் பொருட்​படுத்​தாமல் அன்​புமணியை அழைத்​துப் பேசி பாமக தங்​கள் கூட்​ட​ணி​யில் இணைந்​திருப்​ப​தாக அண்​மை​யில் அறி​வித்​து​விட்​டார் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி. அதி​முக அணிக்கு அன்​புமணி போய்​விட்​ட​தால், திமுக அல்​லது தவெக பக்​கம் போவதைத் தவிர ராம​தாஸுக்கு வேறு வழி​யில்லை என்று சொல்​லப்பட்​டது. அதற்​கேற்ப, ஸ்டா​லின் நல்​லாட்சி நடத்​து​வ​தாக திடீரென திரு​வாய் மலர்ந்​தார் ராம​தாஸ். அவரை தங்​கள் பக்​கம் கொண்​டுவர திமுக தரப்​பில் பேச்​சு​வார்த்தை நடப்​ப​தாக​வும் ஒரு செய்தி லீக்​கானது. ஆனால், “தேர்​தல் நேரத்​தில் வரும் சில செய்​தி​கள் உண்​மை​யாக​வும் இருக்​கும் உண்மை இல்​லாமலும் இருக்​கும்” என்று அதை மறுக்க முடி​யாமல் மறுத்​திருக்​கி​றார் ராம​தாஸ்.

ஆக, அன்​புமணி தரப்​பிடம் தான் பாமக இருப்​ப​தாக நம்​பும் அதி​முக, அவரைப் பிடித்து தங்​கள் பக்​கம் நிறுத்​தி​விட்​டது. இந்த விஷ​யம் திமுக-வுக்​கும் தெரிந்​திருப்​ப​தாலோ என்​ன​வோ, ராம​தாஸை அந்​தக் கட்சி இன்​னும் வெளிப்​படை​யாக நெருங்​காமல் இருக்​கிறது. அதற்கு பல்​வேறு காரணங்​கள் இருக்​கின்​றன. ராம​தாஸுடன் திமுக பேசுவ​தாக தெரிந்​தாலே விசிக முறைத்​துக் கொள்​ளும். ஒரு​வேளை, ராம​தாஸை சேர்த்​துக்​கொள்ள விசிக சம்​ம​தித்​தா​லும், மகனுக்கு அதி​முக கூட்​ட​ணி​யில் எத்​தனை தொகு​தி​கள் தரு​கி​றார்​களோ அதற்கு குறை​வில்​லாத வகை​யில் தங்​களுக்​கும் தர வேண்​டும் என்று ராம​தாஸ் டிமாண்ட் வைப்​பார்.

அப்​படிப் பார்த்​தால், 18 தொகு​தி​களுக்கு குறை​யாமல் ராம​தாஸுக்கு திமுக தரவேண்டி இருக்​கும். திமுக அதற்கு ஒத்​துக் கொண்​டால், தற்​போது திமுக கூட்​ட​ணி​யில் இருக்​கும் மற்ற கட்​சிகள் அனைத்​துமே தங்​களுக்​கான எண்​ணிக்​கையை கணிச​மாக உயர்த்​திக் கேட்​பார்​கள். அதை தர மறுத்​தால், “இரண்டு துண்​டான கட்​சியே இத்​தனை தொகு​தி​களைக் கேட்​கும்​போது நாங்​கள் கேட்​ப​தில் என்ன தவறு இருக்​கிறது?” என்று நியா​யம் கேட்​பார்​கள். அதேசம​யம், இவர்​களைப் போல​வே, 5 அல்​லது 6 சீட்​டுக்கு ராம​தாஸை திமுக சம்​ம​திக்க வைத்​தா​லும் சிக்​கல் இருக்​கிறது. “6 தொகு​தி​களில் போட்​டி​யிட்ட அவர்​கள் பெரிய கட்​சி​யா... 18 தொகு​தி​களில் போட்​டி​யிட்ட நாங்​கள் பெரிய கட்​சி​யா?” என அன்​புமணி தரப்பு ராம​தாஸ் தரப்பை சீண்​டிப் பார்க்​கும்.

ஆக, தாங்​கள் எதிர்​பார்க்​கும் தொகு​தி​களை கேட்​டடைய வேண்​டு​மா​னால் ராம​தாஸுக்கு இப்​போது இருக்​கும் விசால​மான ஒரே வழி தவெக பக்​கம் போவது மட்​டும் தான். இருந்​தா​லும் அதை கடைசி சாய்​ஸாகவே அவர் வைத்​திருக்​கி​றார். பாமக தன்​னிடமே இருப்​ப​தாகச் சொல்​லிக் கொண்டே வந்த ராம​தாஸுக்கு இப்​போது லேசான பயம் வந்​து​விட்​டது. இரண்டு திரா​விடக் கட்​சிகளும் தன்​னைக் கண்​டு​கொள்​ளாமல் மகனுக்கு மட்​டும் முக்​கி​யத்​து​வம் அளித்து அதன் மூலம் கட்​சியை அவர் பக்​கம் கொண்டு போய்ச் சேர்த்து விடு​வார்​களோ என்ற படபடப்பு அவருக்​கு. அதனால் தான், தன்​னைக் கேட்​காமல் அன்​புமணி​யுடன் கூட்​டணி பேசிய பழனி​சாமியை அவரால் சத்​த​மாகக் கூட திட்​ட​முடிய​வில்​லை.

“அன்​புமணி இருக்​கும் இடத்​தில் நாங்​கள் இருக்க மாட்​டோம்” என்று சொல்​வதற்கு மாறாக, “இன்​னும் நாங்​கள் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணியை விட்டு வில​க​வில்​லை” என சம்​மன் இல்​லாமல் விளக்​கமளித்​திருக்​கி​றார் ராம​தாஸ். இதன் மூலம், மகனுக்கு நிக​ராக தனக்​கும் மரி​யாதை அளித்​தால் என்​டிஏ கூட்​ட​ணி​யில் இருக்​க​வும் எங்​களுக்கு சம்​மதம் என சொல்​லாமல் சொல்லி இருக்​கி​றார் ராம​தாஸ்.

தேர்​தலுக்​குத் தேர்​தல், ஜெயிக்​கும் குதிரை​யில் மட்​டுமே சவாரி செய்து கட்​சியை தந்​திர​மாக வளர்த்​தெடுத்த சாணக்​கியர் ராமதாஸ், இப்​படி எந்​தப் பக்​கம் போவது என்று தெரி​யாமல் முட்டுச் சந்​தில் நின்று புலம்​பும் நிலைக்கு ஆளாகி இருப்​பது தமிழக அரசி​யல் களம் எதிர்​பார்​க்​காத ஒன்று ​தான்.

‘கண்டுகொள்ளாத திராவிடக் கட்சிகள்…’ - களத்தை தொலைத்துவிட்டு நிற்கிறாரா ராமதாஸ்?
கூட்டணி அமைப்பது தொடர்பாக டிடிவி.தினகரனுக்கு அழுத்தமா? - அமமுக விளக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in