போத்தி ராஜ்.க

2006-ம் ஆண்டு ‘தினத்தந்தி’யில் உதவி ஆசிரியராக பத்திரிகை பணியில் சேர்ந்த நான், இதுவரை தினமணி, தமிழ் ஓசை, தினகரன் போன்ற பல்வேறு நாளேடுகளில் பணியாற்றி அனுபவம் இருக்கிறது. ஏறக்குறைய 20 ஆண்டுகளாக பத்திரிகை பணியில் இருந்து வருகிறேன். கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து இணையதள செய்தித் தளங்களுக்குச் சென்று தற்போது வரை அந்தப் பிரிவில் தொடர்கிறேன். நியூஸ்ஃபாஸ்ட், ஏசியாநெட், இந்து தமிழ் திசை, பிபிசி செய்தி தளம் ஆகியவற்றில் வணிகப் பிரிவு, தேசியச் செய்திகள், விளையாட்டுச் செய்தி என பல்வேறு பிரிவுகளிலும் தனித்துவமான செய்திகளை வழங்கிய அனுபவம், கட்டுரைகளை எழுதியது, நேர்காணல்கள் நடத்திய அனுபவம் என்னை பத்திரிகை துறையில் அடுத்த கட்டத்துக்கு, மூத்த பத்திரிகையாளர் நிலைக்கு உயர்த்தியது. இருப்பினும், பத்திரிகை துறை மீதுள்ள தீராத காதல், தனித்துவமான கட்டுரைகளை தொடர்ந்து எழுத வேண்டும், சமூகத்துக்கு ஏதேனும் பயனுள்ள தகவல்களை வேறுபட்ட கோணத்தில் தர வேண்டும் என்பதில் இன்னும் ஆர்வம் குறையவில்லை. இந்தக் குறையாத அவாவுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
Connect:
போத்தி ராஜ்.க
Read More
Hindu Tamil Thisai
www.hindutamil.in