பழநி தொகுதியில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு ‘ஹாட் பாக்ஸ்’ விநியோகம்!

ஹாட் பாக்ஸ்.

ஹாட் பாக்ஸ்.

Updated on
1 min read

பழநி: வாக்காளர்களை கவர திமுக சார்பில் பழநி தொகுதி முழுவதும் ‘ஹாட் பாக்ஸ்’ விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பழநி தொகுதியில் 2.37 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த 2011-ல் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தோல் வியை தழுவிய அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனான இ.பெ. செந்தில்குமார் (திமுக), அடுத்து வந்த 2016, 2021 தேர்தலில் வெற்றிபெற்று பழநி தொகுதி எம்எல்ஏ.வாக உள்ளார். 2026 தேர்தலில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசனை எதிர்த்து, திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட கட்சி மேலிடம் அவ ருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

ஆனால், அவரோ பழநி தொகுதியில் போட்டியிட்டு, ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறவே விரும்புகிறார். தேர்தல் நெருங்கும் நிலையில் தொகுதி முழுவதும் உள்ள வாக்காளர்களை கவர, திமுக திண்டுக்கல் மாவட்டம் சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா சிறப்பு பரிசு என்ற பெயரில் ‘ஹாட் பாக்ஸ்’ திமுக பிரமுகர்கள் மூலமாக வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது.

முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் ஸ்டாலின் படம் அச்சடிக்கப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டி, ஹாட் பாக்ஸ் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதுவும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இன்னும் ஹாட் பாக்ஸ் கிடைக்காதவர்கள் திமுகவினரை அணுகி ஹாட் பாக்ஸ் கேட்டு வருகின்றனர். இது போலவே, கட்சி நிர்வாகிகளுக்கும் வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க அறிவுறுத்தும் வகையில் ஹாட் பாக்ஸ் வாங்கியவர்களிடம் செல்போன் எண் பெறப்படுகிறது.

<div class="paragraphs"><p>ஹாட் பாக்ஸ். </p></div>
சூரியக் கட்சி - கதர் பார்ட்டி ‘டீல்’ நிலவரம் என்ன? | உள்குத்து உளவாளி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in