Published on : 10 May 2023 15:26 pm

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு: புகைப்படத் தொகுப்பு

Published on : 10 May 2023 15:26 pm

1 / 21

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி 44.16 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. | படங்கள்: மஞ்சு நாத் கிரண், சைலேந்திர போஜக்

2 / 21

கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது.

3 / 21

இதில் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

4 / 21

இதில் ஆண் வாக்காளர்கள் 2.67 லட்சம் பேரும், பெண் வாக்காளர்கள் 2.64 லட்சம் பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 5ஆயிரம் பேரும் அடங்குவ‌ர்.

5 / 21

இந்த நிலையில் பகல் 1 மணி வரையில் 44.16 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. முன்னதாக காலை 9 மணி நிலவரப்படி 8.21 சதவீதம் வாக்குகளும் முற்பகல் 11 மணி வரை 21 சதவீதம் வாக்குகளும் பதிவாகியிருந்தன.

6 / 21

இந்த முறை கர்நாடகாவில் பாஜக, காங்., மஜத இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

7 / 21

224 தொகுதிகளுக்கான இந்த தேர்தலில் ஆளும் பாஜக 224, எதிர்க்கட்சியான‌ காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாய சங்கம்), மதசார்பற்ற ஜனதா தளம் 207, ஆம் ஆத்மி 217, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளில் களமிறங்கியுள்ளன.

8 / 21

918 சுயேச்சைகள் உட்பட மொத்தமாக 2,613 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்ற‌னர். வாக்கு எண்ணிக்கை மே 13 தேதி நடைபெற இருக்கிறது.

9 / 21

கர்நாடகாவில் இந்த முறை, ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.

10 / 21
11 / 21
12 / 21
13 / 21
14 / 21
15 / 21
16 / 21
17 / 21
18 / 21
19 / 21
20 / 21
21 / 21

Recently Added

More From This Category

x