Published on : 02 May 2024 17:38 pm

சசி தரூர் கலாய்ப்பு முதல் அமித் ஷா உத்தரவாதம் வரை | மைக் டெஸ்டிங்

Published on : 02 May 2024 17:38 pm

1 / 8

“பாஜகவினர் ‘400 இடங்களைப் பெறுவோம்’ என்று சொல்வது ஜோக் ஆகிவிட்டது. 300 பெறுவது சாத்தியமில்லை. 200 கூட பாஜகவுக்கு சவால்தான். பெரும்பான்மை இழப்பது நிச்சயம்.” - சசி தரூர்

2 / 8

“வெயிலை விட பாஜகவின் கொள்கைகள்தான் ஏழை மக்களை அதிகம் சுட்டெரித்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம், வரலாறு காணாத விலைவாசி உயர்வு பற்றி மோடி பேசுவதில்லை.” - கார்கே

3 / 8

“பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரஸின் இளவரசரான ராகுல் காந்தியை இந்தியாவின் பிரதமராக்க விரும்புகிறார்கள்” - நரேந்திர மோடி

4 / 8

“மேற்கு வங்க மக்களின் எண்ண ஓட்டமும் பாஜகவினரின் எண்ண ஓட்டமும் முற்றிலும் மாறுபட்டவை. எனவே, பாஜகவின் எண்ண ஓட்டம் மேற்கு வங்கத்துக்கு பொருந்தாது.” - மம்தா பானர்ஜி

5 / 8

“ராமருக்காக 500 ஆண்டுகள் காத்துக் கிடந்த மக்களுக்காக ராமர் கோயிலை கட்டித் திறந்தார் பிரதமர் மோடி. இடஒதுக்கீட்டை அவர் என்றுமே நீக்கமாட்டார்.” - அமித் ஷா

6 / 8

“பெண்கள் பாதுகாப்பு பற்றி பாஜகவினர் பேசுகிறார்கள். ஆனால், பிரஜ்வால் ரேவண்ணா இந்தியாவை விட்டு வெளியேறுவதை பிரதமர் மோடி தடுக்கவில்லை.” - பிரியங்கா காந்தி

7 / 8

“பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரத்திலும் பிரதமர் மோடி எப்போதும் போல் மவுனம் காப்பது வெட்கக் கேடானது.” - ராகுல் காந்தி

8 / 8

“பிரதமர் மோடிக்கு இடஒதுக்கீடு குறித்த வரலாறு தெரியவில்லை. வரலாற்றை மறந்துவிட்டு பேசுகிறார்.” - ப.சிதம்பரம்

Recently Added

More From This Category

x