Published on : 10 May 2024 19:41 pm

10-ம் வகுப்பு முடிவுகள் முதல் மதுரை மழை வரை - நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ மே 10, 2024

Published on : 10 May 2024 19:41 pm

1 / 36

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 91.55% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. | படங்கள்: ஜெ மனோகரன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

2 / 36

மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.58%, மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.53% என்றுள்ளது. வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் 5.95% அதிகமாக உள்ளது.

3 / 36

பாடவாரியாக தமிழில் 8 பேர், ஆங்கிலத்தில் 415 பேர், கணிதத்தில் 20,691 பேர், அறிவியலில் 5,104, சமூக அறிவியலில் 4,428 பேர் நூற்றுக்கு நூறு முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

4 / 36

தேர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை அரியலூர் 97.31% உடன் முதலிடத்தில் உள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து டாப் 5 பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

5 / 36

10-ஆம் பொதுத் தேர்வில் 87.90% அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

6 / 36

அரியலூர் மாவட்டத்தில் 97.31 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.

7 / 36

சிவகங்கை மாவட்டம் 97.02 சதவிகிதம் தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தையும், ராமநாதபுரம் மாவட்டம் 96.36 சதவிகிதம் தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

8 / 36

கன்னியாகுமரி மாவட்டம் 96.24 சதவிகிதம் தேர்ச்சியுடன் நான்காம் இடத்தையும், திருச்சி மாவட்டம் 95.23 சதவிகித தேர்ச்சியுடன் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

9 / 36

82.07 சதவீதத்துடன் வேலூர் தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடத்தில் உள்ளது.

10 / 36

வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் கடைசி ஐந்து இடங்களில் உள்ளன.

11 / 36

தலைநகர் சென்னை 88.21 சதவீதத்துடன் 30-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

12 / 36

தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களில் 96.85 சதவிகிதமும், ஆங்கிலத்தில் 99.15 சதவிகிதமும், கணிதத்தில் 96.78 சதவிகிதமும், அறிவியலில் 96.72 சதவிகிதமும், சமூக அறிவியலில் 95.74 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

13 / 36

தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை 13510. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 12491 ஆகும்.

14 / 36

தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 260. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 228 (87.69%) ஆகும். | படங்கள்: ஜெ மனோகரன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

15 / 36
16 / 36
17 / 36

இடம்: கோவை | படங்கள்: ஜெ மனோகரன்

18 / 36
19 / 36
20 / 36

மதுரை மாவட்ட அரசு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தடகள போட்டி மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

21 / 36
22 / 36
23 / 36
24 / 36
25 / 36
26 / 36

புதுச்சேரி மணிமேகலை பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒட்டப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு பட்டியலை ஆர்வத்தோடு பார்வையிட்ட பள்ளி மாணவிகள். | படங்கள்: எம்.சாம்ராஜ்

27 / 36
28 / 36

அட்சய திருதியை முன்னிட்டு தங்கநகை கடையில் நகைகளை வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம். | இடம்: நேரு வீதி, புதுச்சேரி. | படங்கள்: எம்.சாம்ராஜ்

29 / 36
30 / 36
31 / 36
32 / 36

மதுரையின் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்தது. | படங்கள்: ஆர்.அசோக்

33 / 36
34 / 36
35 / 36
36 / 36

Recently Added

More From This Category

x