Published on : 29 May 2024 13:42 pm

‘கல்கி 2898 ஏடி’ படத்துக்காக உருவான எதிர்கால வாகனம் ‘புஜ்ஜி’ - போட்டோ ஸ்டோரி

Published on : 29 May 2024 13:42 pm

1 / 19
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏடி’ படத்துக்காக ‘புஜ்ஜி’ எனப் பெயரிட்டு சிறப்பு வாகனம் ஒன்றைப் பிரத்யேகமாக உருவாக்கியுள்ளனர்.
2 / 19
‘கல்கி 2898 ஏடி’ படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், புராணக் கதைகளால் ஈர்க்கப்பட்ட, எதிர்காலத்தில் நடக்கும் அறிவியல் புனைகதையாக உருவாகியுள்ளது. ஜூன் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது.
3 / 19
‘கல்கி 2898 ஏடி’ படத்துக்காகச் சிறப்பு வாகனம் ஒன்றைப் பிரத்யேகமாக உருவாக்கியுள்ளனர். ‘புஜ்ஜி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் சிறப்பு வாகனத்தை மகிந்திரா, கோவையிலுள்ள ஜெயம் மோட்டார்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
4 / 19
சியட் நிறுவனம் பிரத்யேக டயரை வடிவமைத்துள்ளது. ஆறு டன் எடையுள்ள இந்த வாகனத்தை ஹைதராபாத்தில் நடந்த விழாவில், ரசிகர்கள் முன்னிலையில் படக்குழுவினர் அறிமுகப்படுத்தினர்.
5 / 19
இதுகுறித்து நாக் அஸ்வின் கூறும்போது, “இது போன்ற எதிர்கால அம்சங்களை கொண்ட காரை வடிவமைப்பதற்கு அதிக ஆராய்ச்சி தேவைப்பட்டது. படத்தில் இந்த புஜ்ஜி முக் கிய கதாபாத்திரமாக இருக்கும்” என்றார்.
6 / 19
‘கல்கி 2898 ஏடி’ படத்தில் பைரவா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபாஸ் அதே உடையில் சிறப்பு வாக னத்தில் வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார்.
7 / 19
பிரபாஸ் பேசும்போது, “புஜ்ஜி ரொம்பவே ஸ்பெஷல். உங்களைப் போலவே நானும் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட அபிதாப் பச்சன், கமல்ஹாசன் இருவருக்கும் என் நன்றி. இரண்டு லெஜண்டுகளுடன் பணியாற்றியது என் அதிர்ஷ்டம்” என்றார்.
8 / 19
9 / 19
10 / 19
11 / 19
12 / 19
13 / 19
14 / 19
15 / 19
16 / 19
17 / 19
18 / 19
19 / 19

Recently Added

More From This Category

x