1 / 33
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் விடிய விடிய பெய்த கனமழையால், சாலைகள், சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்கியது. உதகை மலைப்பாதையில் மண் சரிந்தும், மரங்கள் சாய்ந்தும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. | படங்கள்: ஜெ.மனோகரன், பெரியசாமி,
2 / 33
கோவையில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்யத் தொடங்கியது. மாநகரின் பல்வேறு இடங்கள் மற்றும் மேட்டுப்பாளையம், அன்னூர், பொள்ளாச்சி, சூலூர், கருமத்தம்பட்டி, கோவில்பாளையம், சோமனூர், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட புறநகரின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்தது. விடிய விடிய பெய்த மழையால், தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது.
3 / 33
கோவை அவிநாசி சாலை அண்ணா மேம்பாலம், லங்கா கார்னர் ரயில்வே பாலம், கிக்கானி பாலம், சோமசுந்தரா மில் சாலை ரயில்வே பாலம் ஆகியவற்றின் கீழ் பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் அங்கு வாகன போக்குவரத்து தடை பட்டது. வாகனங்கள் திருப்பிவிடப்பட்டதால், அண்ணா மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
4 / 33
மருதமலை அடிவாரப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியான ஐ.ஓ.பி காலனியில் காட்டாற்று வெள்ளம் புகுந்தது. அப்பகுதியில் உள்ள தார்சாலையின் பெரும் பகுதி வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டது. மாநகராட்சி 26-வது வார்டுக்குட்பட்ட அம்பேத்கர் நகர் உழைப்பாளர் வீதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சென்று, அங்கு வசித்து வந்த 125 பேரையும் அழைத்து அருகேயுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
5 / 33
மேட்டுப்பாளையம் நகராட்சி காந்திபுரம் 3-வது வீதியைச் சேர்ந்த பழனிசாமி(63) என்பவர், அப்பகுதியில் புதுப்பித்து கட்டப்பட்டு வரும் ஒரு கடையின் அருகே தூங்கிக் கொண்டிருந்தார். கனமழையின் காரணமாக கடையின் சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்ததில் உயிரிழந்தார்.
6 / 33
திருப்பூர் மாநகராட்சி 8-வது வார்டுக்கு உட்பட்ட மும்மூர்த்தி நகர் பகுதி முழுவதும் மழை நீர் வெள்ளம்போல தேங்கியது. பல ஆண்டுகளாக மழைக்காலத்தில் இதே நிலை நீடிப்பதாகவும், முறையான சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
7 / 33
தொடர் மழையால் திருப்பூர்-மங்கலம் அருகே உள்ள நல்லம்மன் கோயில் தடுப்பணையில் வெள்ளம் கரை புரண்டோடியது. தடுப்பணைக்கு நடுவே உள்ள கோயிலுக்கு செல்லும் சிறு பாலம் மூழ்கியதால், கோயிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் அவதியடைந்தனர்
8 / 33
இதேபோல, மங்கலம் சாலைசின்னாண்டிபாளையம் பிரிவில் மழைநீர் வெளியேற வழியின்றி சாலையில் தேங்கியதால் வாகனஓட்டிகளும், பொதுமக்களும்அவதியடைந்தனர்.
9 / 33
மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் நேற்று சின்னாண்டிபாளையம் குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்ற அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
10 / 33
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை காரணமாக பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதுடன், மரங்களும் விழுந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவில் தொடங்கிய மழை, விடிய விடிய பெய்ததால், கோத்தகிரி - மேட்டுப்பாளையம், சாலை, குன்னூர் சாலை, உதகை சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது.
11 / 33
குஞ்சப்பனை என்ற இடத்தில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. மண் திட்டுகள், பாறைகள் உருண்டு நடுரோட்டில் விழுந்தன. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் சாலையின் இருபுறங்களிலும் அணிவகுத்து நின்றன. நெடுஞ்சாலைத் துறையினர் சென்று மண் திட்டுகள், பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இப்பகுதியில் 4 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பொக்லைன் இயந்திரம் மூலமாக ராட்சத பாறையை அகற்றும் பணி நடைபெற்றது.
12 / 33
தொடர் மழை காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா, கோத்தகிரி, குன்னூர் ஆகிய 4 தாலுகாக்களிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
13 / 33
ரயில் சேவை மீண்டும் ரத்து: நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் கல்லாறு, ரன்னிமேடு, ஹில்குரோவ் ஆகிய பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது. கல்லாறு பகுதியில் ரயில் பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டு ஜல்லி கற்கள் அடித்து செல்லப்பட்டன. இதையடுத்து, நீலகிரி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள மண் சரிவு சரிசெய்யப்பட்டு மீண்டும் மலை ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
14 / 33
மழை அளவு விவரம்: கோவை, நீலகிரி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): அன்னூர் 34, மேட்டுப்பாளையம் 67, சின்கோனா 10, சின்னக்கல்லாறு 26, வால்பாறை பிஏபி 13, வால்பாறை தாலுகா 12, ஆழியாறு 110, சூலூர் 47, பொள்ளாச்சி 6, கோவை தெற்கு 75, பி.என்.பாளையம் 96, பில்லூர் அணையில் 150 மிமீ மழை பதிவானது.
15 / 33
தொண்டாமுத்தூர் 60, சிறுவாணி அடிவாரம் 10, கீழ் கோத்தகிரி 228, எடப்பள்ளி 87, குன்னூர்57, பர்லியாறு 57, கிண்ணக்கொரை 43, எமரால்டு 38, மசினகுடி30, குந்தா 28, உதகை 25, அவலாஞ்சி 23, கெத்தை 16, அப்பர்பவானி 25, கேத்தி 38, கோத்தகிரி 50, கோடநாடு 52, கூடலூர் 11, தேவாலா 34, செருமுள்ளி 52, பாடந்துரை 40, ஓவேலி 32, பந்தலூர் 23, சேரங்கோடு 28 மில்லி மீட்டர் மழை பதிவானது.
16 / 33
17 / 33
18 / 33
19 / 33
20 / 33
21 / 33
22 / 33
23 / 33
24 / 33
25 / 33
26 / 33
27 / 33
28 / 33
29 / 33
30 / 33
31 / 33
32 / 33
33 / 33