Published : 28 Oct 2022 10:42 AM
Last Updated : 28 Oct 2022 10:42 AM

’மோடி ஒரு தேசபக்தர்; எதிர்காலம் இந்தியாவின்வசம் தான் இருக்கிறது' - புதின் புகழாரம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் | கோப்புப் படம்

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வல்டாய் டிஸ்கஷன் கிளப் ஏற்பாடு செய்திருந்த வருடாந்திர கூட்டத்தில் ஆற்றிய உரையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும், இந்திய தேசத்தையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

அந்நிகழ்வில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், " இந்தியப் பிரதமர் மோடி ஒரு சிறந்த தேசபக்தர். அவருடைய மேக் இன் இந்தியா திட்டம் பொருளாதார ரீதியாக மட்டுமல்ல கொள்கை ரீதியாகவும் சிறப்பானது. எதிர்காலம் இந்தியாவின் வசம் தான் இருக்கிறது. இந்தியா தான் மிகப்பெரிய ஜனநாயகம் என்பதில் பெருமிதம் கொள்ளலாம். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு இன்று நவீன நாடாக இந்தியா கண்டுள்ள வளர்ச்சி பிரம்மாண்டமானது. இந்தியாவின் மக்கள் தொகையும், அதன் வளர்ச்சியும் அதன் மீது மரியாதையும் ஈர்ப்பும் கொள்ளவைக்கிறது. இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான உறவு மிகவும் முக்கியமானது. தனிச்சிறப்பானதும் கூட. பல ஆண்டுகளாக இந்தியா, ரஷ்யா உறவு பலமாக இருக்கிறது. நமக்குள் எப்போதுமே கடினமான உறவுச் சிக்கல் வந்ததில்லை. நாம் எப்போதும் ஒருவொருக்கொருவர் துணையாக இருந்திருக்கிறோம். எதிர்காலத்திலும் இதுவே நீடிக்கும் என்று நான் நம்புகிறேன்.

ரஷ்ய உரங்களை கூடுதலாக இந்தியாவுக்கு அளிக்குமாறும் பிரதமர் மோடி கோரியுள்ளார். ஆகையால் முன்பு வழங்கியதைவிட 7.6 மடங்கு அதிகமாக உரங்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கிறோம். இருநாடுகளுக்கும் இடையேயான விவசாயம் தொடர்பான வர்த்தகம் இருமடங்காக அதிகரித்துள்ளது'' என்று கூறினார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x