Published : 14 May 2016 10:28 AM
Last Updated : 14 May 2016 10:28 AM

உலகின் மிக வயதான பெண் மரணம்

உலகின் மிகவும் வயதான சூசன்னா முசாத் ஜோன்ஸ் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் காலமானார். அவருக்கு வயது 116.

கடந்த 1899-ம் ஆண்டில் அலபாமா அருகே மான்டோ கோமெரி பகுதியில் சூசன்னா பிறந்தார். அதே பகுதியில் பள்ளி, கல்லூரி படிப்பை நிறைவு செய்தார். ஆசிரியராக விரும்பிய அவர் அதற்கான கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் வறுமை காரணமாக அவரால் படிப்பை தொடர முடியவில்லை.

1928-ம் ஆண்டில் ஹென்ரி ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் 5 ஆண்டுகளில் இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன்பின் சூசன்னா மறுமணம் செய்யவில்லை. அவருக்கு குழந் தைகளும் இல்லை.

வாழ்வாதாரத்துக்காக நியூயார்க் நகரில் குடியேறிய அவர் பணிப்பெண், பாதுகாவலர் என பல்வேறு துறைகளில் பணியாற்றினார். உறவினர்களின் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த் தார். 106 வயது வரை அவர் யாருடைய உதவியும் இன்றி வாழ்ந்தார். அதன்பிறகு முதுமை காரணமாக உறவினரின் வீட்டில் தஞ்சமடைந்தார்.

உலகின் மிக வயதான மனிதர் என்று கருதப்பட்ட டோக்கியோவை சேர்ந்த மிசோ ஓகாவோ (117) கடந்த ஆண்டு உயிரிழந்தார். எனவே 116 வயதான சூசன்னா உலகின் மிகவும் வயதான மனிதர் என்ற பெருமையைப் பெற்றார். நியூயார்க்கில் வசித்து வந்த அவர் நேற்றுமுன்தினம் கால மானார்.

சூசன்னாவின் மறைவைத் தொடர்ந்து இத்தாலியின் வெர்பேனியாவைச் சேர்ந்த எம்ணா மோரானா (116) உலகின் மிக வயதான மனிதர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x