Last Updated : 19 Dec, 2015 10:54 AM

 

Published : 19 Dec 2015 10:54 AM
Last Updated : 19 Dec 2015 10:54 AM

ஐ.எஸ்., அல்-காய்தாவுக்கு நிதி கிடைப்பதை தடுக்க வேண்டும்: ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

ஐ.எஸ். அல்-காய்தா தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப் பதை தடுக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஒருமன தாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

சிரியா, இராக்கில் செயல்படும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு மற்றும் அல்-காய்தா அமைப்புக்கு உலகம் முழுவதும் இருந்து நிதி திரட்டப் படுகிறது. மேலும் ஐ.எஸ். அமைப்பு கச்சா எண்ணெயை விற்பதன் மூலம் உலகின் பணக்கார தீவிரவாத அமைப்பாக உருவெடுத்துள்ளது.

எனவே ஐ.எஸ். அமைப்பு மற்றும் அல்-காய்தா அமைப்பின் நிதி ஆதாரங்களை முடக்க அமெரிக்கா, ரஷ்யா தரப்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள 15 நாடுகளின் பிரதி நிதிகள் கடந்த வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர். இறுதியில் அந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூன் கூறிய தாவது: இந்த தீர்மானத்தின்படி தனியார் நிதி நிறுவனங்களுடன் இணைந்து சந்தேகத்துக்குரிய பணப் பரிமாற்றங்கள் உன்னிப் பாகக் கவனிக்கப்படும்.

பெரும்பாலும் தொண்டு நிறுவனம் பெயரில் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டப் படுகிறது. அவற்றை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கச்சா எண்ணெய் கடத்தல், ஆட் கடத்தல், போதைப் பொருள் கடத்தல், வங்கிக் கொள்ளை என பல்வேறு சட்டவிரோதமான முறைகளில் ஐ.எஸ். தீவிரவாதி களும் அல்-காய்தா தீவிரவாதி களும் நிதி திரட்டுகின்றனர். அவற்றை முடக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி அண்மை யில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாரவை சந்தித்துப் பேசினார். அப்போது சிரியா உள்நாட்டுப் போருக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் இணைந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்துள்ளன. உக்ரைன் விவகாரத்தால் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்ட நிலையில் தற்போது இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் சுமுக உறவு துளிர்த்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஐ.நா. சபையின் மத்திய அவசர கால நிதியத்துக்கு இந்தியா தரப்பில் ரூ.33210000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியம் மூலம் உலக நாடுகளில் பல்வேறு மனிதாபிமான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x