Last Updated : 23 Apr, 2015 10:59 AM

 

Published : 23 Apr 2015 10:59 AM
Last Updated : 23 Apr 2015 10:59 AM

தீவிரவாதம் எந்த வடிவில் தோன்றினாலும் எதிர்ப்பு தெரிவிக்க ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் உறுதி

உலகில் தீவிரவாதம் எந்த வடிவத்தில் தோன்றினாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் உறுதி பூண்டுள்ளன. மேலும், இணை யம் மூலமாகப் பரவும் தீவிர வாதத்தை சமாளிப்பதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு நல்க கைகோத்துள்ளன.

இந்தோனேசியா நாட்டின் தலை நகரமான ஜகார்தாவில் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் மாநாடு நடைபெற்று வருகிறது. அதில் 50க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டுள்ளன. இந்தியாவில் இருந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் நேற்று பல கட்ட விவாதங்களுக்குப் பிறகு தீவிரவாதத்துக்கு எதிராக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. 'பேன்டங் மெசேஜ் 2015' மற்றும் 'மறுமலர்ச்சி ஆசிய ஆப்பிரிக்க உத்திப்பூர்வ கூட் டாண்மை' என இந்தத் தீர்மானங் கள் பெயரிடப்பட்டுள்ளன.

இவை, தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வும், தீவிரவாத அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி மற்றும் பணயத் தொகை, தீவிர வாதத்துக்காக இணையத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடவும் அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோருகின்றன.

மேலும், 'தீவிரவாதத்தை ஒரு மதம் சார்ந்ததாகவோ அல்லது நாடு சார்ந்ததாகவோ அல்லது ஓர் இனக்குழுவைச் சார்ந்ததாகவோ மட்டும் பார்க்கப்படக் கூடாது. அது உலகளாவிய பிரச்சினை' என்று அவற்றில் கூறப்பட்டுள்ளது.

இந்த கருத்துகளை ஏற்றுக் கொண்ட நாடுகள், மேற்கண்ட தீர் மானங்களை ஒருமனதாக நிறை வேற்றின.

சுஷ்மா-மஷபனே சந்திப்பு

மாநாட்டின் தொடக்க விழா முடிந்தவுடன், ஸ்வீடன் வெளியுறவு அமைச்சர் மார்கட் வால்ஸ்ட் ராமுடன், தென்னாப்பிரிக்க வெளி யுறவு அமைச்சர் நோனா மஷபனே உரையாடிக் கொண்டிருந்தார்.

மஷபனேவை உடனே அடை யாளம் கண்டுகொண்ட சுஷ்மா, அவரிடத்தில் ஓடிச்சென்றார். சுஷ்மாவைப் பார்த்ததும் மஷப னேவும் உற்சாகமாகி, இருவரும் ஆரத் தழுவிக் கொண்டனர். பின்னர், மஷபனே சுஷ்மாவை மார்கட் வாஸ்ட்ராமுக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். அவர்கள் இருவரும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஸ்வீடன் நாட்டுக்கு மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணம் குறித்துப் பேசினர்.

பிறகு ஃபிஜி நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சருடன் இருநாட்டு உறவு குறித்த விவாதத்தில் பங்கேற்க சுஷ்மா சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x