Published : 01 Jan 2015 12:24 PM
Last Updated : 01 Jan 2015 12:24 PM

விமான விபத்து: சடலம் மீட்பில் தாமதம்

கடந்த 28-ம் தேதி இந்தோனேசியா வின் சுரபயா நகரிலிருந்து சிங்கப் பூருக்கு 162 பேருடன் `ஏர் ஏசியா இந்தோனேசியா’ விமானம் புறப்பட்டது. நடுவானில் மாயமான அந்த விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தின் உடைந்த பாகங்கள், கரிமதா ஜலசந்தி கடல் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டன.

அப்பகுதியில் பயணிகளின் சடலங்கள் ஆங்காங்கே மிதப்பதை யும் மீட்புக் குழுவினர் கண்டறிந் துள்ளனர். அங்கு வானிலை மோசமாக உள்ளதால் மீட்புப் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் 40 சடலங்கள் மீட்கப்பட்டதாக கடற்படையினர் செவ்வாய்க்கிழமை கூறியிருந்தனர். ஆனால், தேடுதல் மற்றும் மீட்பு அமைப்பு 3 சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டதாகக் கூறியதையடுத்து முந்தைய அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது.

நேற்று மீட்கப்பட்ட சடலங்களில் ஒன்று லைப் ஜாக்கெட்டுடன் இருந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. விமானம் தண்ணீரில் விழுவதற்கு சுமார் ஒரு நிமிடமாவது ஆகியிருக்கும். எனவே, லைப் ஜாக்கெட் அணியுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x