Last Updated : 09 Aug, 2017 11:45 AM

 

Published : 09 Aug 2017 11:45 AM
Last Updated : 09 Aug 2017 11:45 AM

சீன நிலநடுக்கத்துக்கு 13 பேர் பலி; காயம் 175

சீனாவில் தென்மேற்கில் சிசுவான் மாகாணத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்துக்கு 13 பேர் பலியாகினர். 175 பேர் காயமடைந்தனர்.

சிசுவான் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0-ஆக பதிவாகியதாக சீன நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது.

நில நடுக்கத்தினால் சுமாட் 106 அதிர்வுகள் உணரப்பட்டதாகவும், 1.3 லட்ச வீடுகள் சேதமடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து சிசுவான் மாகாண அதிகாரிகள் தரப்பில், “இந்நிலநடுக்கத்துக்கு 13 பேர் பலியாகினர். 175 பேர் காயமடைந்தனர். பலியானவர்களில் சிலர் வெளிநாட்டு பயணிகள். நில நடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதியில் மின்சார கம்பங்கள் மற்றும் தண்ணீர் குழாய்கள் புதுப்பிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக சிசுவான் மாகாணத்தில் 2008 ஆம் ஆண்டு ரிக்டர் அளவில் 8,0ஆக ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 80 ஆயிரம்  பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x