Published : 09 Aug 2017 05:27 PM
Last Updated : 09 Aug 2017 05:27 PM

காதலித்தவரை கரம் பிடிக்க கோடிக்கணக்கான சொத்தை தூக்கி எறிந்த பெண்

காதலித்தவரை கரம் பிடிக்க தந்தையின் கோடிக்கணக்கான சொத்தை தூக்கி எறிந்திருக்கிறார் மலேசியவைச் சேர்ந்த ஏஞ்சலின் கூ என்ற பெண்.

சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பு கொண்டவர் தொழிலதிபர் கோ கே பெங். இவர் மலேசியாவின் பணக்காரர்களில் 44-வது இடத்தில் இருக்கிறார்.

இவரது மகள்தான் 31 வயதான ஏஞ்சலின் பிரான்சிச் கூ, இவர் 2008 ஆம் ஆண்டு லண்டனிலுள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது கரீபியத்தீவுகளின் எளிய குடும்பத்தைச் சேர்ந்த ஜிடிடியா பிரான்சிஸ் உடன்  நண்பராக பழகி பின் காதலித்துள்ளார்.

இதனை தனது தந்தையிடம் தெரிவித்த ஏஞ்சலினுக்கு வழக்கமான தந்தையர்கள் தெரிவிக்கும் பதிலைத்தான் அவரது தந்தையும் அளித்துள்ளார்.

ஏஞ்சலின் காதலுக்கு தடை விதித்த அவரது தந்தை அவரது திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் சினிமா பாணியில் தந்தையின் கோடிக்கணக்கான சொத்தை துறந்து தனது காதலரை எளிய முறையில் திருமணம் செய்து அனைத்து ஊடகங்களின் பார்வையும் அவரது திருமணத்தின் மீது விழச் செய்திருக்கிறார் ஏஞ்சலின்.

திருமணம் குறித்து ஏஞ்சலின் கூறும்போது,

“எனது காதல் திருமணம் குறித்த என் தந்தையின் நிலைப்பாடு தவறு என்று நான் நம்பினேன். இதனால் இதில் எது சரி என்ற கேள்வி எனக்குள் எழவில்லை. உங்களிடம் பணம் இருந்தால் அது ஆசிர்வாதம். பணம் நீங்கள் நினைத்ததை செய்ய வழிவகுக்கும். உங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கும். ஆனால் அத்துடன் சேர்த்து ஆதிக்க உணர்வுகளும் வரும்.

பணம் எதிர்மறையான பண்புகளை உருவாக்கும். அது பிரச்சனைகளையும் உருவாக்கும். இதனால் இதிலிருந்து வெளியே வந்தது எனக்கு எளிதாகவே இருந்தது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x