Last Updated : 20 Jul, 2017 09:21 AM

 

Published : 20 Jul 2017 09:21 AM
Last Updated : 20 Jul 2017 09:21 AM

சர்வதேச ரோபோ போட்டியில் இந்தியாவுக்கு 2 பதக்கம்

அமெரிக்காவில் நடைபெற்ற முதல் சர்வதேச ரோபோ போட்டியில் (குளோபல் ரோபாடிக்ஸ் ஒலிம் பியாட்) 7 இந்திய மாணவர்களைக் கொண்ட குழு 2 பதக்கங்களை பெற்றது.

வாஷிங்டனில் நடைபெற்ற இப்போட்டியில் 157 நாடுகள் பங்கேற்றன. மும்பையைச் சேர்ந்த மாணவர்கள், ஜாங் ஹெங் பொறி யியல் வடிவமைப்புக்கான போட்டி யில் தங்கப் பதக்கத்தையும் சர்வதேச சேலஞ்ச் பந்தயத்தில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இந்தியக் குழுவுக்கு தலைமை வகிக்கும் ராகேஷ் (15), குழுவின் இளைய உறுப்பினர் ஆவார். இவருடன் ஆதிவ் ஷா, ஹர்ஷ் பட், வத்சின், ஆதியான், தேஜாஸ், ராகவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

“முதல் சர்வதேச ரோபா போட்டியில் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. இதில் பதக்கம் வென்றது சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருந்தது” என்று இந்தக் குழு தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இப்போட்டியில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் மாணவிகள் குழுவுக்கு அமெரிக்க உள்துறை அமைச்சகம் முதலில் விசா வழங்க மறுத்துவிட்டது. பின்னர் அமெரிக்க அதிபரின் தலையீட்டால் கடைசி நேரத்தில் விசா கிடைக்கப்பெற்று, இக்குழு போட்டியில் பங்கேற்றது. இக்குழுவும் ஒரு போட்டியில் பதக்கம் வென்றது. போட்டி நடை பெற்ற அரங்கில் இக்குழுவினரை அதிபர் ட்ரம்பின் மகள் இவங்கா சந்தித்தார். சர்வதேச ரோபா போட்டியின் இரண்டாவது போட்டி, மெக்ஸிகோ சிட்டியில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x