Published : 20 Jun 2016 01:57 PM
Last Updated : 20 Jun 2016 01:57 PM

உலகம் முழுவதும் அகதிகள் எண்ணிக்கை 6.5 கோடியாக அதிகரிப்பு: ஐ.நா.

2015-ம் ஆண்டின் முடிவில் எடுக்கப்பட்ட கணக்கின்படி உலகம் முழுவதும் 6.5 கோடி பேர் நெருக்கடிகள் காரணமாக புலம்பெயந்தவர்களாகவும், அகதிகளாகவும் இருப்பதாக ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாறு காணாத அளவுக்கு அகதிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது கவலை அளிப்பதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

சர்வதேச அகதிகள் தினத்தன்று இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது ஐ.நா.வின் அகதிகளுக்கான தூதரகம். 2015-ம் ஆண்டில் மட்டும் அகதிகள் எண்ணிக்கை 50 லட்சம்.

இது குறித்து யுஎன்சிஎச்ஆர் அமைப்பின் தலைவர் பிலிப்பினோ கிராண்டி கூறும்போது, "உள்நாட்டு போர்களும், துயரங்களும் துரத்துவதால் சொந்த இடங்களைவிட்டு வெளியேறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில தேசங்களில் நிலவும் அகதிகளுக்கு எதிரான அரசியல் பார்வைகள் அவர்களை மறுகுடியமர்த்துவதில் சிக்கல் ஏற்படுத்துயுள்ளது.

அகதிகள் எண்ணிக்கை 6.5 கோடி என்ற மிக அதிகமான அளவை எட்டியுள்ள நிலையில் உலக நாடுகள் ஐ.நா. அமைப்புடன் இணைந்து செயல்பட வேண்டும். மனித நேயமே அகதிகள் பிரச்சினைக்கு சிறந்த தீர்வாக்கும். தற்போதைய சூழலில் அதிகம் தேவைப்படுவதும் மனித நேயமே" என்றார்.

தற்போதைய நிலவரப்படி அகதிகளின் எண்ணிக்கை பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் மொத்த மக்கள் தொகையைவிடவும் அதிகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x