Published : 22 Jun 2016 10:37 AM
Last Updated : 22 Jun 2016 10:37 AM

சர்வதேச யோகா தின கொண்டாட்டம்: இனம், மதம் கடந்து ஒன்றுபடுங்கள்- ஐ.நா. பொதுச்செயலர் வேண்டுகோள்

உலக மக்கள் இனம், மத வேறுபாடு களை கடந்து ஒரே குடும்பமாக ஒன்றுபட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப் பட்டது. இதையொட்டி பான் கி-மூன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

சர்வதேச யோகா தினத்தை உற்சாகமாகக் கொண்டாடுவோம். இந்தியாவில் தோன்றி இன்று உலகம்முழுவதும் யோகா பிரபல மடைந்துள்ளது. இந்த நாளில் ஆரோக்கியமான வாழ்வியலுக் கான அடிப்படைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். யோகாசனங் களை மேற்கொள்வதன் மூலம் உடலும் மனமும் சமநிலையா கிறது.

இந்த நாளில் இனம், மத வேறு பாடுகளை கடந்து உலக மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். உலகம் ஒரு குடும்பம் என்ற உணர்வு எல்லோரிடமும் தழைத்தோங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

யோகா தினத்தையொட்டி ஐ.நா. சபையில் நேற்றுமுன் தினம் சிறப்பு அமர்வு நடை பெற்றது. இதில் இந்திய யோகா குரு சத்குரு ஜக்கி வாசுதேவ் பங்கேற்றார். அவர் பேசியதாவது:

யோகாசனம் இந்தியாவில் தோன்றியது என்பதற்காகப் பெருமைப்படுகிறோம். ஆனால் தற்போது யோகா இந்தியாவுக்கு சொந்தமானது அல்ல. சர்வதேச யோகா தினத்தை ஐ.நா. சபை எப்போது அதிகாரபூர்வமாக அறிவித்ததோ அன்றைய தினமே யோகா உலகிற்கு சொந்தமாகி விட்டது. உலக மக்களுக்காக யோகாவை இந்தியா பரிசாக வழங்கியுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம் ஸ்கொயர், ஆஸ்திரேலியாவின் சிட்னி ஒபரா ஹவுஸ், மலேசிய தலைநகர் கோலாலம்பூர், நேபாள தலைநகர் காத்மாண்டு, சீன தலைவர் பெய்ஜிங், பிரான்ஸ் தலைநகர் பாரீஸ், தென்னாப்பிரிக்காவின் டர்பன் உட்பட உலகம் முழு வதும் யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x