Published : 03 Apr 2017 09:34 AM
Last Updated : 03 Apr 2017 09:34 AM

கொலம்பியாவில் மழை நிலச்சரிவில் சிக்கி 254 பேர் பலி: 200-க்கும் மேற்பட்டோரை காணவில்லை

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மழை வெள்ளத் தில் சிக்கி 254 பேர் பலியாகினர். 200 பேரை காணவில்லை. 400-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்.

கொலம்பியாவின் தென்மேற் கில் புட்டுமயோ மாகாணம் உள்ளது. அந்த மாகாணத்தின் தலைநகர் மோகோ. இது மலைப் பிரதேசம் ஆகும். இந்த நகரை சுற்றி 3 நதிகள் பாய்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை மோகோ பகுதி யில் வரலாறு காணாத கனமழை பெய்தது.

இதன்காரணமாக 3 நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சனிக்கிழமை அதிகாலை நகருக் குள் வெள்ளம் புகுந்தது. மலைப் பகுதி என்பதால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டன. வீடு களின் மீது பாறைகள் உருண்டு விழுந்தன.

இதில் 254 பேர் உயிரிழந்த னர். 200-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. 400-க்கும் மேற்பட் டோர் பலத்த காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் தரை மட்டமாகி உள்ளன. மீட்புப் பணி யில் 2500-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர் கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கொலம்பியாவின் மோகோ நகரில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள். | படம்: ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x