Last Updated : 02 Feb, 2018 03:21 PM

 

Published : 02 Feb 2018 03:21 PM
Last Updated : 02 Feb 2018 03:21 PM

ஷாங்காய் நகரில் பாதசாரிகள் மீது வாகனம் மோதி விபத்து: 18 பேர் காயம்

சீனாவின் ஷாங்காய் நகரில் பரப்பரபான வீதியில் வாகனம் ஒன்று தாறுமாறாக ஓடி பாதசாரிகள் மீது மோதியதில் 18 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஷாங்காய் அதிகாரிகள் தரப்பில், "சீனாவின் ஷாங்காய் நகரில் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில், பரப்பரப்பான சாலையில் 40 வயது மதிக்கதக்க நபர் ஒருவர், தனது வாகனத்தை தாறுமாறாக ஓட்டி வந்து பாதசாரிகள் மற்றும் அருகிலிருந்த கடை மீது மோதியிருக்கிறார். இதில் 18 பேர் காயமடைந்தனர். மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் விபத்து ஏற்படுத்திய வாகனம் தீப்பற்றிக் கொண்டதால் அப்பகுதியில், பதற்றம் நிலவியது. இதனை ஷாங்காய் வாசிகள் சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x