Last Updated : 01 Dec, 2017 02:34 PM

 

Published : 01 Dec 2017 02:34 PM
Last Updated : 01 Dec 2017 02:34 PM

இந்தியா தன் முஸ்லிம் மக்களை ஆதரித்து பேணி வளர்க்க வேண்டும்: ஒபாமா வலியுறுத்தல்

இந்தியா தன் நாட்டில் வாழும், தங்களை இந்தியர்களாகவே கருதும் முஸ்லிம் பெருமக்களை ஆதரித்து பேணி வளர்க்க வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வெள்ளிக்கிழமையன்று தெரிவித்துள்ளார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலைமைப்பண்பு கருத்தரங்கில் ஒபாமா இதனை வலியுறுத்தினார்.

2015-ம் ஆண்டு தான் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட போது மதச் சகிப்புத்தன்மை அனைவரும் தங்களுக்குரிய மதத்தை வழிபாடு செய்யவும் உரிமை இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடியுடன் தனிப்பட்ட பேச்சு வார்த்தையில் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.

2009 முதல் 2017 வரை அமெரிக்காவின் 44-வது அதிபராக இருந்த ஒபாமா, முந்தைய இந்திய வருகையின் கடைசி நாளில் உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் மதமாற்றம் குறித்த சர்ச்சைகள் சூழ்ந்திருந்த காலக்கட்டத்தில் கூறியபோது, “எப்போதும் ஒரு எதிர்க்கதையாடல் நிகழ்ந்து வருகிறது, அது தற்போது ஐரோப்பா, அமெரிக்கா, சில வேளைகளில் இந்தியாவிலும் பழங்குடி உந்துதல்கள் சிலபல தலைவர்கள் மூலமாக மீண்டும் தன்னை உறுதி செய்து கொள்கிறது” என்று கூறினார்.

இந்நிலையில் கருத்தரங்கில் இந்தியா பற்றி குறிப்பிட்டு எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒபாமா, இந்தியாவுன் மிகப்பெரிய முஸ்லிம் மக்கள் தொகை ஒருங்கிணைந்தது, தங்களை இந்தியர்களாக கருதக்கூடியது. இது துரதிர்ஷ்டவசமாக மற்ற நாடுகளில் கைகூடுவதில்லை.

“எனவேதான் இந்தியா தனது முஸ்லிம் மக்களை ஆதரித்து பேணி வளர்க்க வேண்டும் என்று கூறுகிறேன். எப்போதும் இதனை நடைமுறைப்படுத்த முனைப்புக் காட்ட வேண்டியது அவசியம் என்று உணர்கிறேன்” என்றார்.

பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதம் பரவுவது குறித்த கேள்விக்கு, “ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில்தான் இருந்தார் என்பதை பாகிஸ்தான் அறிந்திருந்தது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. ஆனால் நாங்கள் அதைத்தான் அங்கு உற்று நோக்கினோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x