Published : 23 Jan 2023 06:00 AM
Last Updated : 23 Jan 2023 06:00 AM

ஜன.23: இன்று என்ன? - இந்திய ராணுவத்தை உருவாக்கிய நாயகன்

தாய்நாட்டிற்கு தன்னலமற்ற சேவை புரிந்தவர், நாட்டின் விடுதலையைத் தன் உயிர் மூச்சாகக் கருதி அயராது உழைத்த புரட்சி வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இவர் வங்காள குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தபோதிலும் இவர் பிறந்தது ஒடிஸா மாநிலம் கட்டாக்கில்.

1897 ஜனவரி 23-ம் தேதி பிறந்தார். பாப்டிஸ்ட் மிஷன் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் பயின்றார். அக்காலகட்டத்தில் ஐஏஎஸ்-க்கு நிகராக கருதப்பட்ட ஐ.சி.எஸ்.-ல் தேர்ச்சி பெற்றார். ஆனால், நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை பார்க்கக் கூடாது என்ற எண்ணத்தில் அந்தப் பதவியை துறந்தார்.

1941-ல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை உருவாக்கி, ‘ஆசாத் ஹிந்த்’ என்ற ரேடியோ மையத்தை நிறுவி, நாட்டுக்கெனத் தனிக் கொடியை அமைத்து, ஜன கன மன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார். இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, பெண்களுக்கென தனிப் பிரிவு ஏற்படுத்தி அதற்கு ஜான்சி ராணிப்படை என்று பெயரிட்டார்.

இந்திய புரட்சி நாயகரும் இந்தியாவின் தன்னிகரற்ற சுதந்தரப் போராட்ட வீரருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1945 ஆகஸ்ட் 18-ம் தேதி விமான விபத்தில் சிக்கி 48-வது வயதில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x