Published : 29 Nov 2022 06:00 AM
Last Updated : 29 Nov 2022 06:00 AM

நவ.29: இன்று என்ன? - காந்தி நிறுவிய சங்கத்தின் தலைவர்

குஜராத் மாநில விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்டவர் அம்ரித்லால் விட்டல்தாஸ் தக்கர். குஜராத்தில் 1869 நவம்பர் 29-ம் தேதி பிறந்தார். 1905-ல் கோபால கிருஷ்ண கோகலே நிறுவிய இந்திய சேவகர்கள் சங்கத்தில் உறுப்பினரானார்.

காந்தியடிகள் தொடங்கிய ஹரிஜன் சேவை சங்கத்தின் முதல் அகில இந்திய செயலாளர் இவரே. இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கத்தில் இருந்தபோது, இந்தியாவின் மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பழங்குடியினர் நிலைமை குறித்து விசாரணை நடத்தி பரிந்துரைகளை வழங்கினார். காந்தியடிகள் இவரை தக்கர் பாபா என்று அன்புடன் அழைத்தார். இவரது பெயரில் சென்னை தியாகராய நகரில் தக்கர் பபாபா வித்யாலயா என்ற பள்ளி இயங்கி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x