Last Updated : 19 Sep, 2022 06:24 AM

 

Published : 19 Sep 2022 06:24 AM
Last Updated : 19 Sep 2022 06:24 AM

ப்ரீமியம்
சிங்கத்தின் பிறந்த நாள்

அன்று காட்டு அரசன் சிங்கத்திற்குப் பிறந்த நாள். சிங்கம் எல்லா விலங்குகளையும் தன் பிறந்தநாளுக்கு அழைத்திருந்தது. எல்லா விலங்குகளும் பிறந்த நாள் பரிசுடன் சிங்கத்தின் குகைக்கு முன்பு கூடின. ஒட்டகச்சிவிங்கி விருந்திற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. அனைத்து விலங்குகளும் சிங்க ராஜாவிற்குப் பரிசுப்பொருட்களைக் கொண்டு வந்திருந்தன. சிங்கத்திற்குப் பிறந்தநாள் என்பதை மறந்து, நரி வழக்கம்போல் சிங்கத்தைக் காண்பதற்கு வந்தது.தம்மிடம் பரிசுப் பொருள் இல்லாததை நினைத்து பதறியது. என்ன செய்வது என யோசித்தது.

சிங்கம் குகையின் மேல் கம்பீரமாக அமர்ந்திருந்தது. நரி சற்றும் தாமதிக்காமல் சிங்கத்தின் அருகில் சென்று, “நீண்ட நீண்ட காலம் நீநீடு வாழ வேண்டும்” என ராகத்துடன் பாடி, ஆடி வாழ்த்தியது. அதையடுத்து, “இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்” என எல்லா விலங்குகளும் ராகத்துடன் சிங்கத்தை வாழ்த்தின. குரங்கு பரிசு வழங்க தயாரானபோது, நரி அதைத் தடுத்து, "இப்படி வழக்கம்போல் பரிசு தர வேண்டாம். நான் கொடுக்கும் இந்த பந்தை நீ (குரங்கு) உதைக்க வேண்டும். பந்து எவர் மீது படுகின்றதோ அவர் பரிசைத் தந்து வாழ்த்தட்டும். பந்தை யானை எடுத்து வந்து கொடுக்கும்" என்றது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x