Published : 12 Dec 2022 06:12 AM
Last Updated : 12 Dec 2022 06:12 AM
மாணவர்களின் பதில்களை வாசித்து முடித்தேன். கவலை தோய்ந்த புன்னகை என் முகமெங்கும் நிரம்பியது. நாற்பது சதவீதம் பேருக்குக் ‘காதலி' உண்டு. இருபது சதவீதம் பேர் செல்பேசியிலும் நேரிலும் பேசிக்கொள்கிறார்கள். பதினைந்து சதவீதம் பேர் பார்ப்பது மட்டும். ஐந்து சதவீதம் பேர் ‘உன் பெயர் என்ன?' என்பது போன்ற சில வார்த்தைகளைப் பேசியிருக்கிறார்கள்.
"தம்பிகளா, உங்களோடு தொடர்ந்து கலந்துரையாடியதில் மகிழ்ச்சி. பல பேர் மனதில் இருப்பதை நம்பிக்கையா பகிர்ந்திருக்கீங்க. உங்களுக்கு ஒரு சில செய்திகளை மட்டும் சொல்றேன். காதல் என்று இங்கே சொல்லப்படும் விளக்கங்கள் பெரும்பாலும் உண்மை இல்லை. உங்கள் வயசுக்கு ஏத்தபடி உடலில் மாற்றங்கள் வரும். அறிவியல் பாடத்தில் விரிவா படிப்பீங்க. உங்க உடலில், மனதில் ஏற்படும் மாற்றங்களை கவனித்துப் பாருங்க.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT