Published : 28 Nov 2022 06:22 AM
Last Updated : 28 Nov 2022 06:22 AM

ப்ரீமியம்
ஆயிரம் ஜன்னல் வகுப்பறை - 16: மனதில் ஆயிரம் கேள்விகள்

மாணவர்கள் எழுதியிருந்த கேள்விகள் பலவும் இன்றைய சூழலில் இருந்து எழுந்ததாக இருந்தன. பெண்கள் குறித்து மாணவர்கள் மனதில் தோன்றிய கேள்விகள். ஏன் பெண்கள் வீட்டு வேலை பார்க்கிறார்கள்? ஏன் பெண்ணைப் பார்க்கவோ தொடவோ கூடாது? ஏன் பெண்கள் தனி, ஆண்கள் தனி என்கிறார்கள்? ஏன் ஆண்கள் போல் பெண்கள் இல்லை? பெரியவங்க ஏன் பெண் படிக்கக்கூடாது என்று கூறுகிறார்கள்? பெண்கள் ஏன் 12-ம் வகுப்போடு படிக்காமல் நின்று விடுகிறார்கள்? பெண்கள் அனைத்து தொழில்களிலும் வருவதற்கு போட்டி காரணமா? வறுமை காரணமா?

கேள்விகளை வாசிக்க வாசிக்க வியப்பில் மூழ்கினேன். காலத்திற்கு ஏற்ற கேள்வி களை யோசிக்கிறார்கள் என்றெல்லாம் மனம் மகிழ்ச்சி அடைந்தது. என்றாலும் கேள்விகளை உரையாடலுக்கு நகர்த்தும் வாய்ப்பு இல்லாமல் போவது தான் வளரிளம் பருவத்தின் சாபம் என்ற வருத்தமும் உடன் எழுந்தது. அது நமது குறைதானே! தம்பிகளா, "உங்கள் கேள்விகள் எல்லாமே ஆழமானவை. இவற்றை வாசிக்கும் போது எனக்கும் பல கேள்விகள் எழுந்தன. அவற்றுள் ஒன்றைக் கேட்கிறேன். ஒரு பெண்ணைப் பார்த்ததும் உன் மனதில் என்ன தோன்றுகிறது? கடகடன்னு எழுதுங்க" என்றேன். வகுப்பறை வேகமாக எழுதத்தொடங்கியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x